தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மக்களவைத் தேர்தலில் போட்டியிட எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு கிடையாது: ஆம் ஆத்மி அறிவிப்பு

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மிக் கட்சியின் தற்போதைய எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று ஆம் ஆத்மி தலைமை அறிவித்துள்ளது.

Updated On :23 ஜனவரி 2019, 11:22 pm IST

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மிக் கட்சியின் தற்போதைய எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று ஆம் ஆத்மி தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தில்லி பொறுப்பாளர் கோபால் ராய் அளித்த பேட்டி: மக்களவைத் தேர்தலில் போட்டியிட பெரும்பாலான ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், இப்போது எம்எல்ஏவாக இருப்பவர்களுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதில்லை என்று கட்சித் தலைமை தீர்மானித்துள்ளது. மேலும், தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பாக தில்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் போட்டியிடவுள்ள ஆம் ஆத்மி வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். இந்தத் தேர்தலை ஆம் ஆத்மி தனியாகவே எதிர்கொள்ளவுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடாது என்றார் அவர். 
ஆம் ஆத்மி கட்சி தில்லியில் ஆளும் கட்சியாகவும், பஞ்சாப் மாநிலத்தில் எதிர்க்கட்சியாகவும் உள்ளது. மேலும், வரும் மக்களவைத் தேர்தலில் தில்லி, ஹரியாணாவில் அனைத்துத் தொகுதிகளிலும், கோவா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது என ஆம் ஆத்மி தலைமை முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.