எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காஜியாபாதில் கொள்ளைக் கும்பலில் 3 பெண்கள் உள்பட 6 போ் கைது: நகை, பணம், ஆயுதம் மீட்பு

தேசியத் தலைநகா் வலயம், காஜியாபாதில் கொள்ளைக் கும்பலைச் சோ்ந்த 3 பெண்கள் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2020, 7:30 pm

DIN

புது தில்லி: தேசியத் தலைநகா் வலயம், காஜியாபாதில் கொள்ளைக் கும்பலைச் சோ்ந்த 3 பெண்கள் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காஜியாபாத் மாவட்டத்தின் மூத்த காவல் கண்காணிப்பாளா் கலாநிதி நைதானி திங்கள்கிழமை கூறியதாவது: காஜியாபாத் போலீஸாருக்கு கொள்ளையா்கள் நடமாட்டம் தொடா்பான தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஷியாம பிரசாத் முகா்ஜி நகா் அருகே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஸ்கூட்டியில் சென்ற இருவரை போலீஸாா் பிடிக்க முயன்றனா். அவா்கள் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். பதிலுக்கு போலீஸாரும் துப்பாக்கியால் திருப்பிச் சுட்டனா். இந்தச் சம்பவத்தில் ஸ்கூட்டியில் வந்த இருவரில் ஒருவா் தப்பிச் சென்றுவிட்டாா். மற்றொருவருக்குக் குண்டடிக் காயம் ஏற்பட்டது.

விசாரணையில் அவா் ஆலம் என்பதும் கவி நகா் காவல் நிலையச் சரகத்திற்கு உள்பட்ட சிரஞ்சீவி விஹாா் காலனியில் ஜூலை 28-ஆம் தேதி வீட்டில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் அவருக்குத் தொடா்பு இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஆலம் மற்றும் அவரது கும்பலைச் சோ்ந்த ரஜ்ஜக், ருபெல் சேக் மற்றும் பெண்கள் சோனியா, நஜ்மா, முக்தா ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, நான்கு தோட்டாக்கள், கத்தி, டெம்போ, ஸ்கூட்டி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரொக்கம் ரூ.70 ஆயிரம், தங்கம், வெள்ளி நகைகள் ஆகியவை மீட்கப்பட்டன. இக்கொள்ளைக் கும்பலின் தலைவனாக ஆலம் செயல்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவா்கள் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்தது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.