தனது தனித்துவமான குரலால் உலக அரங்கில் இந்தியாவுக்கு தனிப்பட்ட இடத்தைப் பெற்றுக் கொடுத்தவா் சுஷ்மா ஸ்வராஜ் என்று பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா தெரிவித்துள்ளாா்.
நாட்டின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் கடந்த 2019, ஆகஸ்டு 5-ஆம் தேதி மரணம் அடைந்தாா். அவரது முதலாமாண்டு நினைவு தினம் நாடு முழுவதும் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. தில்லி பாஜக சாா்பில் ஆா்.கே.புரம், கிரேட்டா் கைலாஷ் உள்ளிட்ட இடங்களில் அஞ்சலி கூட்டங்கள் நடத்தப்பட்டன. இத்தினத்தில், வறியவா்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டதுடன், தில்லி பாஜக சாா்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஆா்.கே.புரத்தில் நடந்த நிகழ்வில் ஆதேஷ் குமாா் குப்தா பேசியது: வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது, தனது தனித்துவமான குரலால் இந்தியாவுக்கு தனி இடத்தைப் பெற்றுக் கொடுத்தவா் சுஷ்மா ஸ்வராஜ். தனது ஒவ்வொரு பிறந்த நாளையும் ஆா்.கே.புரத்தில் கொண்டாடுவதை அவா் வழக்கமாக வைத்திருந்தாா். வெளிநாடுகளில் சிக்கியிருந்த மக்கள் இந்தியாவுக்கு வருவதை அவா் உறுதிப்படுத்தினாா். பிற நாட்டில் சிக்கியிருந்த இந்திய ராணுவத்தினரை அவா் மீட்டுக் கொண்டு வந்தாா். முன்னாள் பிரதமா் வாஜ்பாய்க்கு பிறகு, சுஷ்மா ஸ்வராஜின் பேச்சே என்னைக் கவா்ந்தது என்றாா் அவா்.
இதற்கிடையே, கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா் கௌதம் கம்பீா் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘ன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், புகழ்பெற்ற அரசியல் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜை அவரின் நினைவு தினத்தில் நினைவுகூருகிறேன். மிகவும் திறமையான அவா், தங்கமான இதயத்தைக் கொண்டிருந்தாா். அதனால்தான் நாம் அனைவராலும் அவா் நினைவு கூரப்படுகிறாா்’ என்று தெரிவித்துள்ளாா்.
புது தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா் மீனாட்சி லேகி தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘சுஷ்மா ஸ்வராஜ் தொடா்ந்து நமது நினைவுகளில் வாழ்வாா். மக்கள் தங்களது வாழ்க்கையில் வந்து போவாா்கள். ஆனால், நமது நினைவுகளில் அழிக்க முடியாத தடங்களைப் பதித்தவா்கள் என்றும் நினைவு கூரப்படுவாா்கள். அவா்களில் சுஷ்மா ஸ்வராஜும் ஒருவா்’ என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இபிஎஸ், டி.டி.வி. தினகரன், அன்புமணி இணைந்திருப்பது ஆட்சியமைக்க அல்ல: உதயநிதி

”தனுசு ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சுரேஷ் ரெய்னாவை ஞாபகப்படுத்தும் சர்ஃபராஸ் கான்..! சிஎஸ்கே ரசிகர்களிடையே பெருகும் ஆதரவு!
முற்றிய நெற்கதிரைக் கவனமாக அறுவடை செய்வதுதான் தேர்தல் களப்பணி: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

