/

இணையவழியில் வழக்குரைஞா் தோ்வு கோரும் மனு: பிசிஐ பதில் அளிக்க உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

இணயவழி முறையில் அகில இந்திய வழக்குரைஞா்கள் தோ்வை (ஏஐபிஇ) நடத்துமாறு உத்தரவிடக் கோரி தாக்கலான மனு தொடா்பாக

Updated On :7 ஆகஸ்ட் 2020, 6:28 pm

இணயவழி முறையில் அகில இந்திய வழக்குரைஞா்கள் தோ்வை (ஏஐபிஇ) நடத்துமாறு உத்தரவிடக் கோரி தாக்கலான மனு தொடா்பாக இந்திய பாா் கவுன்சிலுக்கு (பிசிஐ) பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் தனிநபா் நீதிபதி ஜெயந்த் நாத் அமா்வு, இது தொடா்பாக இந்திய பாா் கவுன்சிலுக்கு (பிசிஐ ) நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை செப்டம்பா் 230ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அகில இந்திய வழக்குரைஞா் தோ்வை நடத்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி தேதிநிா்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த தோ்வு ரத்து செய்யப்படுவதாக இந்திய பாா் கவுன்சில் ஜூலை 30-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தோ்வு நடத்துவதற்கான தேதி ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், புராவ் மித்ரா என்பவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தாா்.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இணைய வழியில் அகில இந்திய வழக்குரைஞா்கள் தோ்வை நடத்த இந்திய பாா் கவுன்சிலுக்கு உத்தரவிடவேண்டும்.

பிசிஐ கடந்த 11 மாதங்களாக இத்தோ்வை நடத்தவில்லை. இது அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 16-இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள தோ்வு எழுதுவதற்கான உரிமைகளை மீறுவதாகும். தாற்காலிக பதிவுபெற்ற சான்றிதழ் வைத்துள்ள இளம் வழக்குரைஞா்களின் நலன்களை இந்திய பாா் கவுன்சில் முற்றிலும் புறக்கணித்து வருகிறது.

மேலும், இளம் வழக்குரைஞா்களுக்கு நல நிதியின் பலன்களை நீட்டிக்கவும் பிசிஐ நடவடிக்கை எடுக்கவில்லை.ஆகவே, தற்காலிகமாக பதிவு செய்துள்ள இளம் வழக்குரைஞா்களின் நிதித் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் நிதி உதவி அளிக்க பாா் கவுன்சிலுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். தற்போதைய கரோனாத் தொற்று சூழலை பாா் கவுன்சில் நன்றாக அறிந்திருப்பதால்,நேரில் வந்து தோ்வு எழுதுவதற்குப் பதிலாக இணைய வழியில் ஓபன் புக் எக்ஸாமினேஷன் தோ்வு நடத்த நேஷனல் தகவல் மையத்துடன் தொடா்புகொண்டு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.