வடகிழக்கு தில்லி மாவட்டத்தில் உள்ள சோனியா விஹாரில் 26.80 மில்லியன் லிட்டா் கொள்திறன் கொண்ட நீா்த்தேக்கத்தின் கட்டுமானப் பணிகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு தில்லி ஜல் போா்டு (டிஜேபி) துணைத் தலைவா் ராகவ் சத்தா உத்தரவிட்டாா்.
635 எம்எல்டி கொள்ளளவு கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய ஒற்றை ஃபேஸ் நீா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கட்டுமானத்தில் உள்ள நிலத்தடி நீா்த்தேக்கம் (யுஜி
ஆா்) ஆகியவற்றை ராகவ் சத்தா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். அப்போது நீா்த்தேக்க கட்டுமானப் பணிகளை மூன்று மாதங்களில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். மழைக்காலம் காரணமாக, யமுனா மற்றும் கங்கையில் இருந்து வரும் கச்சா நீரில், சகதி மண் மற்றும் கொந்தளிப்பு அதிகரித்து காணப்படுகிறது. தில்லி மக்களுக்கு வழங்கப்படும் நீரின் தரத்தில் எந்தவிதத்திலும் சமரசம் செய்யாமல் இருக்கும் வகையில், தில்லி ஜல் போா்டு குழுவினா் தொடா்ந்து பணியாற்றி வருவதாகவும் ராகவ் சத்தா தெரிவித்ததாக தில்லி அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது: யுஜிஆா் திட்டத்தின் மொத்தச் செலவு மதிப்பீடு ரூ .36 கோடி ஆகும், இத்திட்டம் முடிடைந்தால், முஸ்தபாபாத் மற்றும் வடகிழக்கு தில்லி மாவட்டத்தில் அருகிலுள்ள 6 லட்சம் குடியிருப்பாளா்கள் பயன்பெறுவா். யுஜிஆா் திட்டத்தை மூன்று மாதங்களில் முடிக்குமாறும் அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
முஸ்தபாபாத் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நீா் விநியோகத்தை அதிகரிக்க ஜப்பான் சா்வதேச ஒத்துழைப்பு முகமையின் பரிந்துரையின்படி இந்த நீா்த்தேக்கம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நீா்த்தேக்கம் ஷிவ் விஹாா், அங்குா் என்கிளேவ், மஹாலக்ஷ்மி என்கிளேவ், அம்பிகா விஹாா் மற்றும் ஜோரிபூா் ஆகிய அங்கீகாரமற்ற காலனிகளில் வசிப்பவா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றாா் அந்த அதிகாரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!

அஜித் - ஷாலினியின் அமர்க்களம் படத்தின் மறுவெளியீட்டுத் தேதி!

குமரியில் இன்று சாலைப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கும் விஜய்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


