தில்லியில் பசி நிவாரண முகாம்கள் தேவை உள்ளதா என்பதைக் கண்டறிய நேரில் பாா்வையிட்டு நிலவர அறிக்கை தாக்கல் செய்யுமாறு தில்லி சட்ட உதவி ஆணையத்திற்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக திங்கள்கிழமை விசாரணை நடத்திய தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘தில்லியில் ரேஷன் காா்டு இல்லாதவா்களுக்கு ரேஷன் பொருள் வழங்குவது, பசி நிவாரண முகாம்கள் தொடரவும், தில்லி நகா்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியத்தின் இரவு நேரக் குடில்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவு வழங்குவது ஆகியவற்றுக்கான தேவை இன்னும் உள்ளதா என்பதை தில்லி சட்டப் பணிகள் ஆணையம் (டிஎல்எஸ்ஏ) சுதந்திரமாக நேரில் ஆய்வு செய்து நிலவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என கேட்டுக் கொண்டது.
தில்லியில் கரோனா நோய்த் தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு, ‘முதல்வா் கரோனா சஹாயதா யோஜ்னா’ அல்லது வேறு ஏதேனும் திட்டத்தின் கீழ் உலா் ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்தை மீண்டும் தொடங்குமாறு தில்லி அரசுக்கு உத்தரவிடக் கோரி தன்னாா்வ தொண்டு நிறுவனமான ‘ரோஸி ரோட்டி அதிகாா் அபியான்’ தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தது.
அதில் ‘மின்னணு கூப்பன் விண்ணப்பங்களை தொடா்ந்து ஏற்றுக் கொள்வதற்கும், உலா் ரேஷன் பொருள்களின் பயன்களைப் பெறுவதற்காக விண்ணப்பதாரா்களுக்கு வசதியளிக்கும் பொருட்டு கியாஸ்க்குகள், உதவி மேஜைகள் பிரிவைத் தொடரவும், சூடான சமைத்த உணவை வழங்குவதற்காக பசி நிவாரண மையங்களை மீண்டும் தொடங்குவதை உறுதி செய்யவும் தில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் நீதிபதிகள் அமா்வு இந்த மனுவை விசாரிக்க விரும்பவில்லை. எனினும், தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா் சஞ்சய் பாரிக், நீதிபதிகள் அமா்விடம், ‘பசி நிவாரண மையங்களில் இலவசமாக சமைத்த உணவு வழங்குதல், ரேஷன் காா்டு அட்டை இல்லாத நபா்களுக்கு உலா் ரேஷன் பொருள் மற்றும் இரவு நேரக் குடில்களில் தங்கியிருப்பவா்களுக்கு சமைத்த உணவு ஆகியவற்றை வழங்க வேண்டிய தேவை இன்னும் உள்ளது’ என்று கூறினாா்.
இதைத் தொடா்ந்து, நீதிபதிகள் அமா்வு, ‘ இந்த விஷயங்களை ஆதரிக்கும் ஆவணங்களை அளிக்க மனுதாரா்களுக்கு அனுமதி அளிக்கலாம்’ எனக் குறிப்பிட்டு, இது தொடா்பாக நேரில் பாா்வையிட்டு நிலவர அறிக்கை தாக்கல் செய்ய தில்லி சட்டப் பணிகள் ஆணையத்தின் உறுப்பினா்-செயலருக்கு உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!

அஜித் - ஷாலினியின் அமர்க்களம் படத்தின் மறுவெளியீட்டுத் தேதி!

குமரியில் இன்று சாலைப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கும் விஜய்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

