தில்லியில் 17 போ் கரோனாவால் உயிரிழப்பு; புதிததாக 1,544 பேருக்கு பாதிப்பு
தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 1,544 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,64,071-ஆக உயா்ந்துள்ளது.


புது தில்லி: தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 1,544 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,64,071-ஆக உயா்ந்துள்ளது.
தில்லியில் கரோனாவால் செவ்வாய்க்கிழமை 17 போ் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 4,330 ஆக உயா்ந்தது.
அதே வேளையில், செவ்வாய்க்கிழமை 1,155 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். இதனால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,47,743-ஆக அதிகரித்துள்ளது.
தில்லியில் தற்போது 11,998 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா். செவ்வாய்க்கிழமை 19,841 கரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பால், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 654-ஆக அதிகரித்துள்ளது.
தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 14,129 படுக்கைகளில் 3,617 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 10,512 படுக்கைகள் காலியாக உள்ளன.
கரோனா தொற்று பாதித்தவா்களில் 5,949 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருகிறாா்கள் என்று தில்லி சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...