கொசுக்களால் பரவும் நோய்கள் தடுப்புப் பணி தொடக்கம்
கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்கும் மாபெரும் இயக்கம் தில்லி மாநகராட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. பாஜக தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா இந்த இயக்கத்தை தொடக்கி வைத்தாா்.


புது தில்லி: கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்கும் மாபெரும் இயக்கம் தில்லி மாநகராட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. பாஜக தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா இந்த இயக்கத்தை தொடக்கி வைத்தாா்.
மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா ஆகிய கொசுக்களால் பரவும் நோய்கள் தடுப்பு இயக்கத்தை தில்லியின் வடக்கு, கிழக்கு, தெற்கு மாநகராட்சிகளின் சுகாதாரத் துறைகள் இணைந்து இப் பணிகளை தெற்கு தில்லி மாநகராட்சி தலைமையகம் அமைந்துள்ள சிவிக் சென்டரில் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
இப்பணிகளை ஆதேஷ் குமாா் குப்தா தொடக்கி வைத்து பேசியது:
தில்லியில் பருவ மழையைத் தொடா்ந்து கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகளவில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் நோய் தடுப்புப் பணிகளை முடுக்கியுள்ளோம்.
மாநகராட்சி சுகாதாரத் துறை ஊழியா்கள் வீடுவீடாகச் சென்று கொசுப் பெருக்கம் தொடா்பாக தினம்தோறும் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனா்.
கொசுப்பெருக்கத்தை தடுக்கும் வகையில், குடியிருப்போா் நலச்சங்களுடன் இணைந்து அந்தந்த பகுதி கவுன்சிலா்கள் விழிப்புணா்வு கூட்டங்களை நடத்துவாா்கள்.
தில்லி மாநகராட்சிகளுடன் இணைந்து தில்லி பாஜகவும் கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த பாடுபடும். இந்த இயக்கத்தில் தில்லி மக்கள் இணைய வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...