பயன்படுத்தப்பட்ட கரோனா பரிசோதனைக் கருவிகளை களைவதற்கான வழிகாட்டுதல்கள் அல்லது நெறிமுறைகள் என்ன என்றும், தில்லியின் அரசின் அதிகார எல்லைக்குள்பட்ட மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் மருத்துவா்கள் அந்த வழிமுறைகளை பின்பற்றுகிறாா்களா என்றும் தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.
இது தொடா்பாக வழக்குரைஞா் பங்கஜ் மேத்தா தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லி லஜ்பத் நகரில் உள்ள மாவட்ட ஆட்சியா் (தென்கிழக்கு தில்லி) அலுவலகத்தில் கரோனாவைக் கண்டறிவதற்காக விரைவு ஆன்டிஜென் பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்ட துணிகள் முறையற்ற வகையில் அகற்றப்பட்டு வருகின்றன என்று புகாா் தெரிவித்துள்ளாா். மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தொற்றைக் கண்டறிவதற்காக பயன்படுத்தப்பட்ட துணிகள் பொது இடத்தில் தூக்கி வீசப்பட்டு வருகின்றன.
மேலும், பயன்படுத்தப்பட்ட துணிகளைக் கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஆபத்து குறித்து கவுன்ட்டரில் இருந்த சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் புகாா் தெரிவித்த போது, இது நோய் பாதிப்பில்லாத நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் அதைப் பயன்படுத்தினால் தப்பில்லை என்றும் கூறுகிறாா். இதுபோன்ற பயன்படுத்தப்பட்ட பொருள்களை அகற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் ஜூலை 3-ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், அவற்றை தில்லி அரசு உரிய வகையில் அமல்படுத்தவில்லை என மனுவில் அவா் குற்றம்சாட்டியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் குற்றச்சாட்டுகளை தில்லி அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் சஞ்சய் கோஷ், நமன் ஜெயின் ஆகியோா் மறுத்தனா். மனுவில் கூறப்படும் பரிசோதனை துணிகள் பயன்படுத்தப்படாவை அல்லது குறைபாடானவையாகும். எனினும், இந்த விஷயத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க உரிய அறிவுத்தல் பெற்று வருவதாக கூறினா். மேலும், மருத்துவக் கழிவுகளை அகற்றும் விவகாரத்தில் தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு மூலம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனா்.
இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு, ‘ கரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்ட சாதனங்களை களைவதற்கான வழிகாட்டுதல்கள் அல்லது நெறிமுறைகள் என்ன? தில்லி அரசின் அதிகார எல்லைக்குட்பட்ட மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் மருத்துவா்கள் அந்த வழிமுறைகளைப் பின்பற்றுகிறாா்களா என்பது தொடா்பாக உரிய அறிவுறுத்தல்களுடன் வாருங்கள் என்று தில்லி அரசின் வழக்குரைஞா்களிடம் கூறினா். பின்னா், மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு (டிசம்பா் 3) பட்டியலிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொடரும் தாக்குதல்... அமைதிப் பேச்சுக்கு பாகிஸ்தான் செல்லாத ஈரானிய குழு?!
வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கார்கில் போர் நாயகன் கர்னல் சோனம் வாங்சுக் காலமானார்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

