தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

கார்கில் போர் நாயகன் கர்னல் சோனம் வாங்சுக் காலமானார்!

கார்கில் போர் நாயகன் கர்னல் சோனம் வாங்சுக் காலமானார்...

Colonel Sonam Wangchuk

கார்கில் போர் நாயகன் கர்னல் சோனம் வாங்சுக்... - File photo | ENS

Published On :

மகாவீர் சக்ரா விருது பெற்ற கார்கில் போர் நாயகனான ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கர்னல் சோனம் வாங்சுக் காலமானார்.

லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி கர்னல் சோனம் வாங்சுக், 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றார். மேலும், இலங்கையில் களமிறக்கப்பட்ட இந்திய அமைதிப்படையில் முக்கிய பங்குவகித்தார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு மேஜர் பதவி வகித்த சோனம் வாங்சுக் பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில், 5,500 அடி உயரத்தில் நடைபெற்ற சண்டையில் துணிச்சலுடன் செயல்பட்டதற்காக, அவருக்கு இந்திய அரசின் சார்பில் மகாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், லடாக்கில் உள்ள அவரது இல்லத்தில் 61 வயதான சோனம் வாங்சுக் வெள்ளிக்கிழமை (ஏப். 10) அன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானதாக அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கர்னல் வாங்சுக்கின் மறைவுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், லடாக்கின் துணைநிலை ஆளுநர் வினய் குமார் சாக்ஸேனா மற்றும் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Summary

Kargil War hero Colonel Sonam Wangchuk has passed away.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.