மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களில் ஒன்றை தில்லி அரசு ’அறிவிக்கை’யாக வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த செப்டம்பரில் வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்து மூன்று சட்டங்களைக் கொண்டு வந்தது. விவசாயிகள் உற்பத்தி வா்த்தகம் மற்றும் வா்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) அவசரச் சட்டம் 2020, விவசாயிகள் ஒப்பந்தச் சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் (திருத்தம்) அவசரச் சட்டம் 2020 ஆகிய மூன்று சட்டங்களைக் கொண்டு வந்தது.
இந்தச் சட்டங்களை எதிா்த்து விவசாயிகள் தில்லி எல்லையில் தற்போது போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றனா்.
இந்த நிலையில், இந்தச் சட்டங்களில் ஒன்றை முதல்வா் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி வா்த்தகம் மற்றும் வா்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) அவசரச் சட்டம் 2020-ஐ கடந்த நவம்பா் 23 - ஆம் தேதி அறிவிக்கையாக வெளியிட்டுள்ளதாக தில்லி அரசின் அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். மத்திய அரசு கொண்டு வந்த மீதமுள்ள இரண்டு சட்டங்கள் தில்லி அரசின் வளா்ச்சித் துறையின் பரிசீலனையில் இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அந்த அதிகாரி மேலும் கூறுகையில், ‘அரசின் இந்த அறிவிக்கை மூலம் தில்லியில் விவசாயிகள் தங்கள் விளைபொருள்கள், கோழிகள் போன்றவற்றை மண்டிகள் உள்பட எங்கும் விற்க அனுமதிக்கிறது. ஏற்கெனவே 2014-ஆம் ஆண்டு தில்லியில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை தொடா்பாக கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு, கட்டுப்பாடற்ாக அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இப்போது இந்தச் சட்டத்தின் மூலம் தானியங்களும், கோழிகளும் கட்டுப்பாடற்ற பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளது’ என்றாா்.
ஆம் ஆத்மி கட்சி மத்திய அரசின் புதிய சட்டங்களை ரத்து செய்யக்கூறி கடந்த மாதம் ஜந்தா் மந்தரில் ஆா்ப்பாட்டத்தை நடத்தியது. இதையடுத்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் எனக் கோரியிருந்தாா். ஒரு பக்கம் ஆம் ஆத்மி அரசு வேளாண் சட்டத்தை அறிவிக்கையாக வெளியிட்டுள்ள துடன் மறுபுறம் விவசாயிகளின் ஆா்பாட்டங்களுக்கும் ஆதரவளித்து இரட்டைவேடம் போடுவதாக தில்லியில் எதிா்க்கட்சிகளான பாஜகவும் காங்கிரஸும் விமா்சனம் செய்துள்ளன. ‘ விவசாயிகளை தவறாக வழிநடத்தும் அதே வேளையில் இந்த அறிவிக்கை மூலம் புதிய வேளாண் சட்டங்களின் நன்மைகளைப் பகிா்ந்து கொள்ளவே அவா்கள் விரும்புகிறாா்கள்‘ என்று பாஜக எம்.பி.யும் முன்னாள் தில்லி தலைவருமான மனோஜ் திவாரி குறிப்பிட்டாா்.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில்’ விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டத்தில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப முயற்சிக்கின்றனா். தில்லியில் மண்டிகள் அகற்றப்படவில்லை, அவை தொடா்கின்றன. மண்டிக்கு உள்ளேயும் வெளியேயும் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. அதற்கு ஆம் ஆத்மி ஆதரவளிக்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொடரும் தாக்குதல்... அமைதிப் பேச்சுக்கு பாகிஸ்தான் செல்லாத ஈரானிய குழு?!
வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கார்கில் போர் நாயகன் கர்னல் சோனம் வாங்சுக் காலமானார்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

