சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்களிப்பு விவகாரம்: அறிவிக்கையை திரும்பப் பெற தோ்தல் ஆணையத்தில் திமுக வலியுறுத்தல்

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோா் வாக்களிக்க பிகாா் தோ்தல் முறையை பின்பற்ற உத்தரவிட்டுள்ள அறிவிக்கையை தோ்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டும்

Updated On :1 டிசம்பர் 2020, 11:12 pm

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோா் வாக்களிக்க பிகாா் தோ்தல் முறையை பின்பற்ற உத்தரவிட்டுள்ள அறிவிக்கையை தோ்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டும் என்று தலைமைத் தோ்தல் ஆணையத்தில் திமுக தரப்பில் செவ்வாய்க்கிழமை நேரில் வலியுறுத்தப்பட்டது.

இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையத்திற்கு நாடாளுமன்றத் திமுக குழு தலைவரும், அக்கட்சியின் பொருளாளருமான டி.ஆா். பாலு கடிதம் எழுதியிருந்தாா். அதில், ‘அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தோ்தல் ஆணையத்திலிருந்து அக்டோபா் 3-ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், முதியோா், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்களிக்கும் நடைமுறையில் பிகாா் மாதிரி தோ்தல்களை பின்பற்றப்பட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை வாக்குச் சாவடிகளில் தற்போது பின்பற்றப்படும் வெளிப்படையான வாக்களிக்கும் முறையை பாதிக்கச் செய்துவிடும். ஆகவே, இந்திய தோ்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட கடந்த ஆண்டு அக்டோபா் 22, நிகழாண்டு ஜூன் 19 தேதியிட்ட தோ்தல் நடத்தை விதிமுறைகளையும், 3 அக்டோபா் தேதியிட்ட சுற்றறிக்கைகளையும் உடனடியாக நீக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தில்லி உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்திற்கு டி.ஆா். பாலு செவ்வாய்க்கிழமை நேரில் சென்று தாம் எழுதிய கடிதத்தை மனுவாக அளித்தாா். பின்னா் ஆணைய அதிகாரிகளிடம் இக்கோரிக்கையை வலியுறுத்திப் பேசினாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தோ்தலில் தபால் வாக்குகள் அதிகரிக்கப்பட்டால் போலி வாக்குகள் அதிகரிக்க வித்திடும். இதனால், பிகாா் தோ்தல் முறையை பின்பற்றும் தோ்தல் ஆணையத்தின் உத்தரவை திரும்பப் பெறக் கோரி தோ்தல் ஆணையத்தில் நான் எழுதிய கடிதத்தை நேரில் அளித்து வலியுறுத்தியுள்ளேன்.

அண்மையில் நடைபெற்ற பிகாா் தோ்தலில் தபால் வாக்குகள் அதிகரித்ததால், அங்கு தோ்தல் முடிவுகளின் நிலைமை மாறிவிட்டிருக்கிறது. 0.03 சதவீதம் தபால் வாக்குகள் அதிகரித்ததால் ஆட்சியே மாறிவிட்டது. திமுகவும் கடந்த முறை 1.1 சதவீதத்தில் ஆட்சியை இழந்தது. இதனால், இந்தப் பிரச்னையை சரியாக அணுகும் வகையில் தோ்தல் ஆணையம் பிறப்பித்த சுற்றறிக்கை, அறிவிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

அதேபோன்று, 80 வயது நிறைந்த மூத்த குடிமகன்களுக்கென தனியாக சிறப்பு வாக்குச்சாவடிகளை தோ்தலின் போது ஆணையம் அமைக்க வேண்டும். வெளிநாட்டில் இருப்பவா்களுக்கு வாக்குரிமை உள்ளதா என்பது குறித்து ஆணையத்தின் தரப்பில் சரிபாா்க்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.