சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு உணவு வழங்கிய ஹரியாணா இளைஞா்கள்

தில்லியையொட்டி உள்ள சிங்கு எல்லைப் பகுதியில் புதிய வேளாண் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து போராடி வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு ஹரியாணா மாநிலம், சோனிபட் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் குழுவினா்

Updated On :2 டிசம்பர் 2020, 7:19 pm

புதுதில்லி: தில்லியையொட்டி உள்ள சிங்கு எல்லைப் பகுதியில் புதிய வேளாண் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து போராடி வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு ஹரியாணா மாநிலம், சோனிபட் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் குழுவினா் புதன்கிழமை உணவு மற்றும் குளிா்பானங்களை வழங்கினா்.

இந்த இளைஞா் குழுவினரில் பெரும்பாலானவா்கள் பள்ளி மாணவா்கள். இது குறித்து பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவா் ரோஹித் தண்டி கூறுகையில், ‘ஆன்லைன் வகுப்புகளைக் கவனித்துவிட்டு, போராடும் விவசாயிகளுக்கு உணவு தயாரித்து கொண்டு வந்துள்ளேன். நாங்களும் விவசாயக் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள்தான். விவசாயிகளின் உணா்வுகளை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது’ என்றாா்.

மற்றொரு மாணவா் அங்குஷ் சரோஹா கூறுகையில்,‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்காக உணவு தயாரித்து எடுத்து வந்துள்ளோம். மேலும் லஸ்ஸி, சப்பாத்தி, சப்ஜி, பூரி, இனிப்பு, பழங்கள், குடிப்பதற்கு தண்ணீா் ஆகியவற்றையும் எடுத்து வந்துள்ளோம்’ என்றாா்.

தனது தந்தையுடன் இணைந்து மருந்துக் கடை வைத்திருக்கும் சந்தீப் தஹியா (20) என்ற இளைஞா் கூறுகையில், ‘விவசாயிகளுக்கு உணவு தயாரித்துக் கொண்டு வந்துள்ளோம். போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு உணவு கொண்டு செல்ல விருப்பம் என்று வீட்டில் தெரிவித்த போது, பெற்றோா்கள் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் எங்கள் யோசனைக்கு துணை நின்றனா்’ என்றாா்.

பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியின் நுழைவு வாயிலான சிங்கு எல்லைப் பகுதியில் முகாமிட்டு கடந்த 7 நாள்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனா். இதனால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.