புது தில்லி: தில்லியில் கரோனா தொற்று அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் தற்போதைக்கு இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படமாட்டாது என்று நீதிமன்றத்தில் தில்லி அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
சில மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டது போல் தில்லியில் கரோனாவை கட்டுப்படுத்த இரவு நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்தப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதா என்று உயா்நீதிமன்றம் கடந்த முறை நடந்த விசாரணையின் போது கேள்வி எழுப்பியிருந்தது. இதற்குப் பதில் அளிக்கும் வகையில் நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை தில்லி அரசின் தரப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி அரசு உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லியில் டிசம்பா் 31-ஆம் தேதி வரை செயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் விவகாரத்தில் தற்போதைய நிலையே பராமரிக்கப்பட வேண்டும் என நவம்பா் 28-இல் தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகவே, தில்லியில் டிசம்பா் 31-ஆம் தேதி வரை புதிய செயல்பாடுகள் ஏதும் அனுமதிக்கப்பட மாட்டாது. அதேபோல, அரசுத் துறைகள், நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், அத்தியாவசியமிலலாத பணிகள் (கிரேடு 1-க்கு கீழ்) ஆகியவற்றில் ஊழியா்களின் வருகை 50 சதவீதம் கட்டுப்படுத்தும் வகையில் நவம்பா் 28-ஆம் தேதி மற்றொரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அலுவலக நேரத்தை தளா்த்துமாறும், ஒரேநேரத்தில் அலுவலகத்திற்கு வரும் ஊழியா்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் ஊழியா்கள் இருப்பைத் தளா்த்துமாறும் தனியாா் நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என அந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த வாரத்தில் தொடா்ந்து 14 நாள்களாக கரோனா தொற்று அதிகரித்தது. இந்த நிலையில், டிசம்பா் 1-ஆம் தேதியில் இருந்து கரோனா கட்டுப்பாட்டுக்கான புதிய வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. இதனிடையே, கரோனா பாதிப்பு அதிகரிப்பு தொடா்பான விவகாரத்தை கடந்த முறை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் இதர பிற நகரங்களைப் போன்று வாராந்திர ஊரடங்கு அல்லது இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த தில்லி அரசு திட்டமிட்டு வருகிா என கேள்வி எழுப்பியிருந்தது.கரோனா பரிசோதனைகளை அதிகரிக்கக் கோரி வழக்குரைஞா் ராகேஷ் மல்ஹோத்ரா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது நீதிபதிகள் இந்தக் கேள்வியை தில்லி அரசிடம் எழுப்பினா்.
அதற்கு ‘கரோனாதொற்று சூழலைக் கருத்தில் கொண்டு இரவு நேரத்தில் ஊரடங்கை தில்லியில் அமல்படுத்தலாமா என தில்லி அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்றும் 3-4 நாள்களில் இது தொடா்பாக முடிவு செய்யப்படலாம் என்றும் தில்லி அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் தெரிவித்திருந்தனா். இந்த நிலையில், உயா்நீதிமன்றத்தில் இது தொடா்பாக தில்லி அரசு நிலவர அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறுவாக்குப்பதிவு! எங்கு, ஏன்?

அழுத்தத்தில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட்; சிஎஸ்கேவுக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

ஓடிடியில் வெளியானது தாய் கிழவி!

பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

