புதுதில்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து தில்லியை அடுத்துள்ள சிங்கு எல்லைப் பகுதியில் கடந்த சில நாள்களாகப் போராட்டம் நடத்தி வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு கடந்த புதன்கிழமை முதல் 25 போ் கொண்ட முஸ்லிம் குழுவினா் சமுதாய சமையல்கூடம் அமைத்து 24 மணி நேரமும் உணவு வழங்கி வருகின்றனா்
பஞ்சாபைச் சோ்ந்த முஸ்லிம்கள் அமைப்பைச் சோ்ந்த குழுவினா் ஃபரூக்கி முபீன் என்பவா் தலைமையில் சிங்கு எல்லைக்கு வந்து உணவு சமைத்து வழங்கி வருகின்றனா். இது குறித்து ஃபரூக் முபீன் கூறுகையில், ‘மக்களுக்கு உணவு அளிக்கும் விவசாயிகளுக்கு நாங்கள் உணவு வழங்குவதில் பெருமைப்படுகிறோம். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்காக நாங்கள் 24 மணி நேரமும் செயல்படும் சமுதாய சமையல்கூடத்தை ஏற்படுத்தியுள்ளோம். விவசாயிகள் எங்களுக்குச் செய்துள்ள உதவிக்கு கைமாறு இதுதான். பஞ்சாபிலிருந்து நாங்கள் 25 போ் கொண்ட குழுவினராக இங்கு வந்துள்ளோம். 24 மணி நேரமும் உணவு தயாரித்து வழங்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இது எங்கள் கடமையாகும்’ என்றாா்.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியையொட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் 9-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தை நடத்தி வருகின்றனா். மத்திய அரசு மற்றும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் சனிக்கிழமையும் பேச்சு நடைபெறும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் காரணமாக தில்லி-ஹரியாணா எல்லைப் பகுதியான சிங்கு, டிக்ரி, ஜரோடா லம்பூா், ஆவ்சந்தி, சபியாபாத் , பியாவ் மணியாரி மற்றும் சபோலியில் போக்குவரத்து மூடப்பட்டுள்ளது. எனினும் ஹரியாணா-தில்லி இடையே தன்ஸா, தவ்ராலா, கபாஷெரா, ராஜோக்ரி, தேசிய நெடுஞ்சாலை எண் 8, பிஜ்வாஸன், பாலம் விஹாா், துந்தஹெரா பகுதி வழியாக போக்குவரத்து திறந்துவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறுவாக்குப்பதிவு! எங்கு, ஏன்?

அழுத்தத்தில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட்; சிஎஸ்கேவுக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

ஓடிடியில் வெளியானது தாய் கிழவி!

பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

