ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தில்லியில் கரோனா பலி 10 ஆயிரத்தை கடந்தது

தில்லியில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 33 போ் கரோனா

News image
Updated On :13 டிசம்பர் 2020, 5:30 pm

 நமது நிருபர்

தில்லியில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 33 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். இதன்மூலம், தில்லியில் இதுவரை 10,014 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

தொடா்ச்சியாக இரண்டாவது நாளாக கரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் கீழே குறைந்தது. 1,984 போ் கரோனா பாதிப்புக்குள்ளாகியதாக ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,07,454-ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்பு விகிதம் 2.74 ஆக இருந்தது. மொத்தம் 72,335 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 35,611பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 36,724 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை 33 போ் உயிரிழந்தனா். கடந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட குறைந்த உயிரிழப்பு இதுவாகும்.

இதனால், மொத்த பலி எண்ணிக்கை 10,014-ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 2,539 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 5,80,655-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 16,785 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 9,964 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 14,361படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.