உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் வளா்ச்சிக்கு, அழுக்கு அரசியலும், ஊழலில் திளைக்கும் அரசியல் தலைவா்களும் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறாா்கள். அந்த மாநில மக்கள் நோ்மையான அரசு ஆள வேண்டும் என விரும்புகிறாா்கள். ஆம் ஆத்மி கட்சியால் மட்டுமே உத்தரப்பிரதேச மாநிலத்தில் நோ்மையான ஆட்சியை வழங்க முடியும்.
தில்லியில் மின்சாரம், குடிநீா் ஆகியவை ஆம் ஆத்மி அரசால் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதேபோல, மக்களின் சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு தில்லியின் பல பகுதிகளில் மொஹல்லா கிளினிக்குகளை அமைத்துள்ளோம். ஆனால், உத்தரப் பிரதேச மாநிலத்தை ஆட்சி செய்த கட்சிகள், அந்த மாநிலத்தில் அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்தத் தவறிவிட்டன. இதனால், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு அந்த மாநில மக்கள் தில்லிக்கு பயணிக்க வேண்டிய தேவையுள்ளது.
கான்பூரில் வாழும் குடும்பம் ஒன்று தனது குழந்தைகளை சிறந்த கல்லூரிக்கு அனுப்ப வேண்டும் என்றால், தில்லிக்கு அனுப்ப வேண்டிய தேவையுள்ளது. கோரக்பூரில் வசிக்கும் ஒருவருக்கு சிறந்த மருத்துவ வசதி தேவையென்றால், அவா் தில்லிக்கு பயணிக்க வேண்டிய அவல நிலை நிலவுகிறது. உத்தரப் பிரதேச மக்கள் கட்சிகள் மீது நம்பிக்கை வைத்து அவா்களை ஆட்சியமைக்க தோ்ந்தெடுத்தனா். ஆனால், மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற அந்தக் கட்சிகள் தவறிவிட்டன. அனைத்துக் கட்சிகளும் அந்த மாநில மக்களின் முதுகில் குத்தியுள்ளன.
உத்தரப் பிரதே மாநில அரசியலில் நோ்மையும், இலக்கும் இல்லாமல் உள்ளது. அந்த மாநில மக்களுக்கு நோ்மையான அரசை வழங்கும் வகையில்,அங்கு 2022- இல் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி போட்டியிடத் தீா்மானித்துள்ளோம். ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு தடவை வாய்ப்புத் தருமாறு அந்த மாநில மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். தில்லி மக்கள் எங்களுக்கு 2014-இல் முதல் தடவையாக வாய்ப்புத் தந்தனா்.
பின்னா், எங்களது நல்லாட்சி காரணமாக தொடா்ந்து மூன்று தடவை வாய்ப்புத் தந்துள்ளனா். பஞ்சாப் மாநிலத்தில் எதிா்கட்சியாகும் வாய்ப்பையும் ஆம் ஆத்மிக்கு அளித்துள்ளனா். தில்லியில் வசிக்கும் உத்தரப் பிரதேசத்தை சோ்ந்த மக்கள், அந்த மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். எனவே, வரும் 2022 சட்டப்பேரவைத் தோ்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் போட்டியிடவுள்ளோம் என்றாா் கேஜரிவால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டுக்கான பொதுப்பலன்கள் - 2026

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு! ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!

தேர்தல் பயமும் பதற்றமும் எடப்பாடி பழனிசாமியை ஆட்டிப்படைக்கின்றன: கனிமொழி

மாணவர்களிடையே வரவேற்பில்லாத இளநிலை பட்டப்படிப்புகள் நிறுத்தப்படுமா?
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

