முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

தமிழ்ப் புத்தாண்டுக்கான பொதுப்பலன்கள் - 2026

தமிழ்ப் புத்தாண்டில் பொதுவாக நிகழக்கூடியவை பற்றி..

News image

பொதுப்பலன்கள் - DPS

Updated On :10 ஏப்ரல் 2026, 11:43 am IST

2026 பராபவ வருடத்தின் பொதுப் பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ பராபவ வருஷம் - உத்தராயனம் - வஸந்த ரிது - சித்திரை மாதம் - 01ம் தேதி - 14.04.2026 - அன்றைய தினம் செவ்வாய்க்கிழமையும் - க்ருஷ்ண பக்ஷ துவாதசியும் - சதயம் நக்ஷத்ரமும் - சுப்ர நாமயோகமும் - கௌலவ கரணமும் - சித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 8.44க்கு (உதயாதி நாழிகை: 06:27)க்கு ரிஷப லக்னத்தில் ஸ்ரீபராபவ வருஷம் பிறக்கிறது.

பொது பலன்கள்

வருடம் ஆரம்பத்தில் குரு பகவான் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். வைகாசி மாதம் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுன ராசியில் இருக்கும் காலகட்டத்தில் அரசர்கள் யுத்தத்தில் பிரியமுள்ளவர்களாக இருப்பார்கள். பூமியில் ஈதிபாதையும் பயிர்கெடுதியும் சில இடங்களில் மழை அதிக அளவும்  இருக்கும்.

கடக ராசியில் இருக்கும் காலத்தில் விவசாயம் சிறக்கும். ஆன்மிக பணிகள் முன்னேற்றம் இருக்கும். உலகளவில் மங்கள காரியங்கள் நடக்கும். திருமணத் தடை நீங்கும். நீர் ராசியில் குரு இருப்பதால் மழை பொழிவு அதிகம் இருக்கும்.

உலக பொருளாதாரத்தில் சிறந்த முன்னேற்றம் இருக்கும். பாவத்தின் அடிப்படையில் 4ம் இடமான கடகத்தில் குரு உச்சமாவதால் விவசாயம் செழிக்கும். ராகு கேதுவின் சஞ்சாரத்தால் மக்களுக்கு ஆரோக்கியம் உண்டாகும். அரசர்களின் மன நிலை மாறி யுத்த நிலை மாறும். மழை பெய்யும்.

கல்வியில் மாணவர்கள் புதிய நிலையை அடைவார்கள். அறிவியல் கண்டுபிடிப்புகள் புதிய உச்சத்தை தொடும். புதிய நோய்கள் வந்தாலும் மக்களின் வாழ்க்கையை முடக்கும் அளவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

காய்கறி வகைகள் - பழங்கள் - பருப்பு வகைகள் - எண்ணெய் வித்துக்கள் விலை ஏறும். சிறுதானியங்களின் உபயோகம் அதிகரிக்கும். ராணுவம் காவல்துறை ஊர்க்காவல்படை இதர துறைகளில் பெண்கள் அதிகமாக சேர்க்கப்படுவார்கள்.

ராஜா குரு பலன்

ஆன்மிகம் தழைக்கும். வங்கி, நீதி நெறிமுறைகள் சிறப்பாகும்.

மந்திரி செவ்வாய் பலன்

இந்த ஆண்டு மந்திரியாக செவ்வாய் பகவான் வருவதால் தீ விபத்துக்கள் ஏற்படும். சில இடங்களில் மழை குறைவாக பெய்யும்.

மேக அதிபதி சந்திரன் பலன்

இந்த ஆண்டு மேக அதிபதியாக சந்திர பகவான் வருவதால் சரியான காலத்தில் மழை பொழிந்து நீர் நிலைகள் நிரம்பும். விவசாயம் செழிக்கும்.

ஸஸ்யாதிபதி சுக்ரன் பலன்

இந்த ஆண்டு ஸஸ்யாதிபதியாக சுக்ர பகவான் இருப்பதால் புஷ்பங்கள் அதிகமாக விளையும், வாசனை வஸ்துக்கள் அதிகரிக்கும்.

சேனாதிபதி சந்திரன் பலன்

சந்திரன் பலத்தால் இந்த ஆண்டு பெண்கள் பல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவர். மக்கள் சுகமாக வாழ்வார்கள்.

ரஸாதிபதி சூர்யன் பலன்

நூதனமான எண்ணை உற்பத்தி, எண்ணை உற்பத்தி அதிகமாவதால் விலை குறையும்.

தான்யாதிபதி புதன் பலன்

இந்த ஆண்டு மழை, புயல் சேதங்களால் தான்ய உற்பத்தி குறையும்.

நீரஸாதிபதி சுக்ரன் பலன்

இந்த ஆண்டு திடப்பொருள்கள் உற்பத்தி அதிகரிக்கும். பட்டு ஜவுளி உற்பத்தி அதிகரிக்கும்.

சித்திரை மாதப் பிறப்பின் பலன்

இந்த ஆண்டு சித்திரை மாதம் செவ்வாய்க்கிழமை அன்று வருவதால் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களினால் மக்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படும். பெண்கள் சம்பந்தப்பட்ட பணிகளில் அதிகமாக ஈடுபாடு கொள்வார்கள் பெண்களை மதிப்பவர்கள் ஏற்றம் காண்பார்கள்

மகர சங்கராந்தி மிஸ்ரகை பலன்

இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும். கல்வி சம்பந்தமான விஷயங்களில் நல்ல மாற்றங்கள் வந்து சேரும். மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். நாமதேயம் மூலமாக நன்மைகள் நடக்கும். சன்னியாசிகளுக்குப் பீடை.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.