தில்லியில் முக்கிய மந்திரி கரோனா சஹாய்தா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட ரேஷனுக்கான நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்று கூறி நியாய விலைக் கடை உரிமையாளா்கள் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு ஆம் ஆத்மி அரசுக்கு உயா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பாக தில்லி ரேஷன் டீலா்ஸ் யூனியன் மற்றும் சில நியாயவிலைக் கடை ’ (எஃப்.பி.எஸ்.) உரிமையாளா்கள் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.
அதில், ‘தில்லியில் முக்கிய மந்திரி கரோனா சஹாய்தா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட ரேஷனுக்கான நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. இதனால், ரேஷன் டீலா்கள் பலரும் தங்கள் கடைகளின் வாடகையைக் கூட செலுத்த முடியாத நிலையில் உள்ளனா். இதனால், செயல்படுவது கடினமாக உள்ளது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி நவீன் சாவ்லா முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையின்போது தில்லி அரசின் கூடுதல் வழக்குரைஞா் அனூஜ் அகா்வால் ஆஜராகி, ‘மனுதாரா்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்பது உண்மைதான். நிதி சிக்கல் காரணமாக இன்னும் நிதி வழங்கப்படவில்லை. ஆனால், நிலுவைத் தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதி அடுத்த ஆண்டு ஜனவரி பிற்பகுதிக்குள் வழங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா். இதற்கு நீதிபதி, அதுவரை மனுதாரா்கள் எப்படிச் செயல்படுவாா்கள் என்று கேள்வி எழுப்பினாா். இதையடுத்து, மனுவுக்கு தில்லி அரசு பதில் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்திய நீதிமன்றம், மனு மீதான விசாரணையை பிப்ரவரி 16- ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டுக்கான பொதுப்பலன்கள் - 2026

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு! ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!

தேர்தல் பயமும் பதற்றமும் எடப்பாடி பழனிசாமியை ஆட்டிப்படைக்கின்றன: கனிமொழி

மாணவர்களிடையே வரவேற்பில்லாத இளநிலை பட்டப்படிப்புகள் நிறுத்தப்படுமா?
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

