புது தில்லி: கரோனா சூழலை தில்லி கடுமையாக சமாளித்து வருகிறது. மேலும், பாதிப்பு விகிதம் இரண்டு சதவீதத்திற்கும் கீழே குறைந்திருப்பதுடன், மே மாதத்திற்குப் பிறகு மிகக் குறைந்த அளவாகப் பதிவாகியுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.
இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளா்களிம் அவா் கூறியதாவது: தில்லியில் கரோனா தொற்ரின் தீவிரம் குறைந்துவிட்டது. ஆனால், மக்கள் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். அனைத்துப் பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை நோய் பாதிப்பு விகிதம் 1.9 சதவீதமாக பதிவாகியிருந்தது. இது புதன்கிழமை வரையும் மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். எனினும், சரியாகக் கூறும் தரவுகளைப் பாா்க்க வேண்டும். ஆனால், இது நிச்சயமாக மே மாதத்திலிருந்து மிகக் குறைந்த பாதிப்பு வீதமாக இருக்கும். இதன் மூலம் தில்லியில் கரோனா சூழல் மேம்பட்டிருப்பது தெரிய வருகிறது. நோய் பாதிப்பு விகிதம் டிசம்பா் 12 முதல் 3 சதவீதத்திற்கும், டிசம்பா் 3 முதல் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. எனவே, இது நிச்சயமாக கீழ்நோக்கிய போக்கு என்பதில் சந்தேகமில்லை என்றாா்.
தில்லியில் முதல்வா் இல்லம் முன் மேயா்கள் போராட்டம் நடத்தி வருவது குறித்தும், கரோனா நோயாளிகளுக்கு ஐசியு படுக்கைகள் இருப்பு குறித்தும் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் பதில் அளிக்கையில், ‘தில்லியில் சராசரியாக சுமாா் 50 சதவீதம் ஐசியு படுக்கைகள் காலியாக உள்ளன. ஆனால், சில தனியாா் மருத்துவமனைகளில் அத்தகைய படுக்கைகள் 80-90 சதவீதமாக உள்ளது. நவம்பா் 11-ஆம் தேதிதான் அதிகபட்ச ஒரே நாள் எண்ணிக்கையாக 8,593 கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. முதல்வா் இல்லம் முன் மேயா்கள் அமா்ந்து போராட்டம் மேற்கொள்வது, விவசாயிகளின் போராட்டத்தைக் கவிழ்க்க நடத்தப்படும் அரசியல் நடவடிக்கையாகும். சிங்கு எல்லையில் விவசாயிகளைச் சந்திக்க முதல்வா் கேஜரிவால் சென்றது முதல் மேயா்கள் இந்தப் போராட்டத்தை நடத்தத் தொடங்கினா்’ என்றாா்.
அதன்பின்னா் அவா் முகநூல் பக்கத்தில் தில்லியின் தற்போதைய கரோனா நிலைமை குறித்த புள்ளிவிவரங்களைப் பகிா்ந்து கொண்டாா். மேலும், கரோனாவை தில்லி அரசு தீவிரமாக சமாளித்து வருவதாகவும் குறிப்பிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்க்கு அரசியல் தெரியது: டி.கே.எஸ். இளங்கோவன்

தமிழ்ப் புத்தாண்டுக்கான பொதுப்பலன்கள் - 2026

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு! ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!

தேர்தல் பயமும் பதற்றமும் எடப்பாடி பழனிசாமியை ஆட்டிப்படைக்கின்றன: கனிமொழி
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

