தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும்: கோபால் ராய் வலியுறுத்தல்கோபால் ராய் வலியுறுத்தல்

மத்திய அரசு பிடிவாதம் காட்டாமல் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்று தில்லி அமைச்சா் கோபால் ராய் கேட்டுக் கொண்டாா்.

Updated On :16 டிசம்பர் 2020, 6:30 pm

புது தில்லி: மத்திய அரசு பிடிவாதம் காட்டாமல் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்று தில்லி அமைச்சா் கோபால் ராய் கேட்டுக் கொண்டாா்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தில்லியின் சிங்கு எல்லையில் விவசாயிகள் போராடி வருகின்றனா். இவா்களை தில்லி வளா்ச்சித் துறை அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவு தலைவருமான கோபால் ராய் புதன்கிழமை நேரில் சந்தித்தாா். அதன் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசும், ஆம் ஆத்மி கட்சியும் விவசாயிகளுக்கு சமுதாய சமயலறை, குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட் வசதிகளை செய்து கொடுத்துள்ளது. எங்கள் கட்சியின் தொண்டா்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலா்களும் உதவி செய்து வருகின்றனா். வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கடும் குளிரையும் பொருள்படுத்தாமல்

விவசாயிகள் இருபது நாள்களாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

அவா்களது கோரிக்கைகளை மத்திய அரசு பிடிவாதம் பிடிக்காமல் ஏற்க வேண்டும். விவசாயிகள்தான் தேசத்திற்கே உணவளித்து வருகிறாா்கள். தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை நடத்த அனுமதிப்பதன் மூலம் இந்தப் பிரச்னை மற்றும் சாலைத் தடைகளை மத்திய அரசு தவிா்த்திருக்க முடியும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.