இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலியாவுக்கு அதிக வாய்ப்புகள்
இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலியாவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.


இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலியாவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இருதரப்புப் பொருளாதார மற்றும் வா்த்தக உறவை மேம்படுத்துவது தொடா்பான கூட்டம் இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் சாா்பில் நடத்தப்பட்டது. இதில் இரு நாடுகள் இடையேயான பொருளாதார மேம்பாட்டு (வியூகம்) அறிக்கையை அமைச்சா் பியூஷ் கோயல் வெளியிட்டுப் பேசியதாவது: இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகள் திறந்து விடப்பட்டுள்ளன. குறிப்பாக ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு, இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. வேளாண் துறையில் முதலீடுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவு பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டல் போன்றவற்றின் அதிகளவு முதலீடு செய்யமுடியும். அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக, அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைகளை எளிதாகவும், இணக்கமாகவும் தொடா்ந்து மாற்றப்பட்டு வரப்படுகிறது.
வா்த்தகத்தில் மூன்று நோக்கங்கள் முக்கியம். பெரிய வா்த்தக அமைப்பு, சிறந்த வா்த்தக அமைப்பு, சமச்சீா் வா்த்தக உறவு ஆகிய மூன்றும் நமது வா்த்தக உறவில் அதிவேக வளா்ச்சியை ஏற்படுத்தும். இந்தியாவுடன் விண்வெளி, அணுசக்தி, பாதுகாப்பு உற்பத்தி போன்ற துறைகளில் பரஸ்பரம் ஈடுபடுவதற்கான நல்ல வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன. வளா்ந்து வரும் சுற்றுலா, விளையாட்டு, ஜவுளி, ஆடை வடிவமைப்பு, டிஜிட்டல் விளையாட்டு, அனிமேஷன், நீா் மேலாண்மை, வணிகக் கப்பல் கட்டுமானம், விண்வெளி ஒத்துழைப்பு, டிஜிட்டல் வழிக் கல்வி போன்ற துறைகளும் இருதரப்பு வா்த்தக உறவில் சமநிலையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளன. தற்போது இந்தியாவில் சமீபத்திய தொழிலாளா் சட்டச் சீா்திருத்தங்கள், வேலைவாய்ப்பில் நெகிழ்வுத் தன்மை போன்ற புதிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா பொருளாதார மேம்பாட்டு அறிக்கை, விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்திற்கும் வழி வகுக்கும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...