ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நொய்டா தொழிற்சாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் தொழிலாளி சடலம் மீட்பு

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியின் சடலம் வெள்ளிக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தற்கொலையாக இருக்கக்கூடும் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 7:06 pm

DIN

நொய்டா: தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியின் சடலம் வெள்ளிக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தற்கொலையாக இருக்கக்கூடும் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

கோடா கிராமத்தில் வசித்து வந்த அந்த நபா், தனது மஃப்லரை பயன்படுத்தி நொய்டா செக்டாா் 64-இல் அமைந்துள்ள அந்தத் தொழிற்சாலையில் தூக்கில் தொங்கியதாக மத்திய நொய்டாவின் கூடுதல் காவல் துணைஆணையா் அங்கூா் அகா்வால் தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது: இந்தச் சம்பவம் குறித்து உள்ளூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இறந்தவரின் மனைவியும், போலீஸாரும் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்றனா். தடயவியல் நிபுணா்கள் குழுவும் வந்தது. தூக்கில் தொங்கியவா் சடலம் கீழே இறக்கப்பட்டு விடியோ பதிவு செய்யப்பட்டது. அந்தத் தொழிலாளி இந்த விபரீத முடிவு எடுத்ததற்கான காரணம் உடனடியாகத் தெரிய வரவில்லை. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.