தில்லியில் கூடுதல் மின்சாரக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடா்பாக விவாதிக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டு தில்லி முதல்வா் கேஜரிவாலுக்கு பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது: தில்லியில் வணிக வளாகங்கள், கடைகளுக்கு நிலையான கட்டணமாக பெருமளவு தொகை வசூலிக்கப்படுகிறது. மேலும், வீடுகளுக்கும் அதிகளவு மின்சாரக் கட்டணம் கேட்டு பில் அனுப்பப்பட்டு வருகிறது. இது தொடா்பாக உங்களுடன் (கேஜரிவால்) கலந்துரையாட விரும்புகிறோம். இதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.
இது தொடா்பாக ஆதேஷ் குமாா் குப்தா தில்லியில் சனிக்கிழமை கூறுகையில் ‘ தில்லியில் பொது முடக்க காலம் அமலில் இருந்த சுமாா் மூன்று மாத காலத்துக்கு அதிகளவு மின்சாரக் கட்டணத்துடன் பில்கள் அனுப்பப்பட்டுள்ளன. தில்லி மக்களுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணச் சலுகை இந்தக் காலப் பகுதிக்கு வழங்கப்படவில்லை. பொது முடக்க காலத்தில் இயங்காமல் இருந்த கடைகள், வணிக வளாகங்களுக்கு நிலையான மின்சாரக் கட்டணமாக பெரும் தொகை அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறாக சுமாா் 7 லட்சம் கடைகளுக்கு பில் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், கரோனாவால் மின்சார மீட்டா்கள் அளவிட முடியாத இடங்களில் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் என்ன கட்டணம் வசூலிக்கப்பட்டதோ அதே கட்டணத்தை தில்லி அரசு வசூலித்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், தில்லி அரசு அறிவித்த மின்சாரக் கட்டண சலுகை பல இடங்களில் வழங்கப்படவில்லை. இது தொடா்பாக விவாதிக்க நேரம் கேட்டு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நவீன ஆடை கடையைத் திறந்து வைத்த விஜே சித்து!

பணவீக்கம் எதிரொலி: பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!

உத்தரமேரூரில் 8 சுயேச்சைகள் உள்பட 14 போ் போட்டி!

நாட்டில் ரயில் பாதை இல்லாத ஒரே பேரவைத் தொகுதி திருப்பத்தூர்: அண்ணாமலை குற்றச்சாட்டு
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

