தில்லியில் கரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு தில்லி அரசு உரிமை கொண்டாடுவதாக கிழக்கு தில்லி பாஜக மக்களவைத் தொகுதி உறுப்பினா் கெளதம் கம்பீா் குற்றம் சாட்டினாா்.
இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் கூறியிருப்பது: தில்லியில் கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது தொடா்பாக உரிமை கொண்டாட மாட்டேன் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அண்மையில் பகிரங்கமாக அறிவித்திருந்தாா். ஆனால், தில்லியில் கரோனா தடுப்புப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடா்பாக ஒவ்வொரு மணிநேரமும் தனது சுட்டுரையில் பதிவிட்டு அதற்கு கேஜரிவால் உரிமை கொண்டாடி வருகிறாா்.
ஜூலை மாத இறுதியில் 5.5 லட்சம் கரோனா நோயாளிகள் தில்லியில் இருப்பாா்கள் என்று எந்த அடிப்படையில் தில்லி அரசு அறிவித்திருந்தது? இவ்வாறு அறிவித்ததன் மூலம், குழப்பமான சூழலை உருவாக்கி, மத்திய அரசை மிரட்டலாம் என்று தில்லி அரசு கணக்குப் போட்டதா? என்று கேட்டுள்ளாா் அவா்.
ஆம் ஆத்மி கேள்வி
இந்நிலையில், கெளதம் கம்பீருக்கு பதில் அளிக்கும் வகையில், ஆம் ஆத்மிக் கட்சி தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கா்நாடகா ஆகிய மாநிலங்களில் 27.4, 28.6, 51, 89 சதவீதமாக கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தில்லியில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வர மத்திய அரசு காரணம் என்றால் இம்மாநிலங்களில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நவீன ஆடை கடையைத் திறந்து வைத்த விஜே சித்து!

பணவீக்கம் எதிரொலி: பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!

உத்தரமேரூரில் 8 சுயேச்சைகள் உள்பட 14 போ் போட்டி!

நாட்டில் ரயில் பாதை இல்லாத ஒரே பேரவைத் தொகுதி திருப்பத்தூர்: அண்ணாமலை குற்றச்சாட்டு
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

