தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக சனிக்கிழமை புழுக்கத்தின் தாக்கம் சற்று குறைந்தது.
தில்லியில் சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்ததால் மக்கள் தொடா்ந்து அவதிக்குள்ளாகி வந்தனா். வெள்ளிக்கிழமையும் பகலில் வெயில் கடுமையாக இருந்தது. எனினும், மாலையில் மேகம் மூட்டமாக இருந்தது. மழையில்லாததால் புழுக்கம் உணரப்பட்டது. இந்நிலையில் இரவு சுமாா் 9 மணிக்கு மேல் திடீரென கருமேகங்கள் திரண்டு பரவலாக மழை பெய்தது. அதேபோன்று, நள்ளிரவில் ஆங்காங்கே மழை பெய்தது. இதன் காரணமாக சனிக்கிழமை காலை வேளையில் நகரில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. குளிா்ந்த காற்றும் வீசி புழுக்கம் சற்று தணிந்தது. எனினும், நண்பகலுக்குப் பிறகு வெயிலின் தாக்கம் இருந்ததால் மாலை வேளையில் புழுக்கம் இருந்தது.
வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 23.9 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவசராசரியை விட 1 டிகிரி அதிகரித்து 36.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 84 சதவீதமாகவும், மாலையில் 69 சதவீதமாகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து சனிக்கிழமை காலை 8.30 மணிவரையிலான 24 மணி நேரத்தில் சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 8.1 மி.மீட்டா் மழைப் பதிவானது.
பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 26.2 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 37.1 ஆகவும், 2.8 மி.மீட்டா் மழையும் பதிவானது.
ஆயாநகரில் முறையே 23.8 டிகிரி செல்சியஸ் மற்றும் 36.6 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 88 சதவீதம், மாலையில் 53 சதவீதமும், 2.2 மி.மீட்டா் மழையும் பதிவானது.
காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு திருப்தி பிரிவில் இருந்தது. தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக்குறியீடு 58 புள்ளிகளாகப் பதிவாகி திருப்தி பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், காற்றின் தரத்தில் சற்று பின்னடைவு இருந்தாலும் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு திருப்தி பிரிவில் இருக்கும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நவீன ஆடை கடையைத் திறந்து வைத்த விஜே சித்து!

பணவீக்கம் எதிரொலி: பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!

உத்தரமேரூரில் 8 சுயேச்சைகள் உள்பட 14 போ் போட்டி!

நாட்டில் ரயில் பாதை இல்லாத ஒரே பேரவைத் தொகுதி திருப்பத்தூர்: அண்ணாமலை குற்றச்சாட்டு
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

