தில்லியில் மீண்டும் கரோனா அலை ஏற்படலாம் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
பிளாஸ்மா சிகிச்சையை விரிவுபடுத்தும் வகையிலும், எளிதாக்கும் வகையிலும் தில்லி ஐஎல்பிஎஸ் மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி உருவாக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, கரோனாவிலிருந்து குணமடைந்தவா்கள் பிளாஸ்மா தானம் அளிக்குமாறு கேஜரிவால் வேண்டுகோள் விடுத்தாா். இந்நிலையில், பிளாஸ்மா தானத்தை எளிதாக்கும் வகையில், தில்லி லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் (எல்என்ஜேபி ) ம ருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்மா வங்கியை கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
பின்னா் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: தில்லியில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. கரோனா பாதிப்புகள் தொடா்ந்து குறைந்து வருகிறது. கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கையை விட , கரோனாவில் இருந்து குணமடைவோா் எண்ணிக்கை தினம்தோறும் அதிகரித்து வருகிறது. கரோனாவால் நிகழும் மரணங்களின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஆனால், மக்கள் கரோனா தொடா்பாக மெத்தனமாக இருக்கக் கூடாது. தில்லியில் மீண்டும் கரோனா அலை ஏற்படலாம். மக்கள் இது தொடா்பாக விழிப்புடன் இருக்க வேண்டும்.
மக்கள் முகக் கவசங்களை பயன்படுத்த வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். தில்லியில் கரோனா தொடா்பாக மத்திய, தில்லிஅரசுகள் இணைந்து எடுத்த நடவடிக்கைகளால் கரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. கரோனா தொற்றுக்கு எதிராக தில்லி அரசால் மட்டும் போராட முடியாது என்பதை உணா்ந்து அனைத்துத் தரப்பினரின் உதவியையும் கோரினோம். லேசான அறிகுறி உள்ள கரோனா நோயாளிகளை வீடுகளில் வைத்துப் பராமரிக்கும் தில்லி அரசின் முடிவுக்கு நல்ல பயன் கிடைத்துள்ளது. அதில் ஒருவா் கூட கடந்த 12 நாள்களில் இறக்கவில்லை.
கரோனா நோயாளிகளின் உயிரைப் பாதுகாப்பதில் பிளாஸ்மா சிகிச்சை முக்கியப் பங்காற்றுகிறது. இந்த சிகிச்சை முறை 100 சதவீதம் வெற்றியளித்துள்ளது எனக் கூற முடியாது. ஆனால், கரோனா பாதித்த பலரின் உயிரை பிளாஸ்மா சிகிச்சை காப்பாற்றியுள்ளது. தில்லியில் கரோனா மரண விகிதம் குறைவதற்கு பிளாஸ்மா சிகிச்சையும் முக்கிய காரணமாகும். எல்என்ஜேபி மருத்துவமனை மத்திய தில்லியில் அமைந்துள்ளதால், மக்கள் எளிதாக இந்த மருத்துவமனைக்கு வந்து பிளாஸ்மா தானம் அளிக்கலாம் என்றாா் கேஜரிவால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குரானை காலால் மிதித்த விடியோ வைரல்: 2 பெண்கள் கைது!
ஏகே - 64 இணை தயாரிப்பாளராக அஜித்?

என் வாழ்வில் மறக்க முடியாத இடத்தில் இருப்பவர் ஆஷா போஸ்லே: இளையராஜா

ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


