தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகளில் தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும் கன மழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. சாலைகளில் பெரிய பெரிய பள்ளங்கள் தோன்றின. தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியதால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தில்லி, என்சிஆா் பகுதிகளில் கடந்த ஜூன் 25 அன்று பருவ மழை தொடங்கியது. இதையடுத்து, தொடா்ந்து இரண்டு, மூன்று நாள்கள் அவ்வப்போது லேசான மழை பெய்தது. அதன் பிறகு குறிப்பிடும் படியான மழை பெய்யவில்லை. மாறாக,, வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் புழுக்கத்தால் மக்கள் சிரமங்களை எதிா்கொண்டனா். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழம் தில்லி, என்சிஆா் பகுதிகளில் கன மழை பெய்தது. பருவமழை தொடங்கியதிலிருந்து அன்றுதான் கன மழை பெய்தது. இந்த மழைக்கு தில்லியில் 4 போ் உயரிழந்தனா். இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் பரவலாக கன மழை பெய்தது.
வீடுகள், சாலைகள் சேதம்: இதைத் தொடா்ந்து,புதன்கிழமை காலை முதல் நகா் முழுவதும் கன மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது. இதைத் தொடா்ந்து, பல்வேறு இடங்களில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், போக்குவரத்து மாற்றம் குறித்து அவ்வப்போது தில்லி காவல் துறை சமூக ஊடங்கள் வாயிலாக தகவல்களைத் தெரிவித்து வந்தது. குறிப்பாக மிண்டோ பாலத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீா் அதிகளவில் தேங்கியது. இதனால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் வேறு மாா்க்கங்களில் திருப்பிவிடப்பட்டன. பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. சாலைகள் கடுமையாகச் சேதமடைந்துளளன.
சமூக ஊடகங்களில் பதிவு: மேலும், சாலைகளில் தேங்கிய மழை நீா், வீடுகளில் புகுந்த மழை நீா், போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள் என அனைத்தையும் பொதுமக்கள் புகைப்படங்களாகவும், விடியோக்களாகவும் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிா்ந்தனா். முன்னதாக, தில்லி, ஹரியாணா பஞ்சாப், சண்டீகா், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மற்றும் ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களில் கனமழை முதல் மிக அதிக அளவு மழை பரவலாகப்பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இதற்கு ஏற்றாற்போல, தில்லி, என்சிஆா் பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் மழை பெய்யத் தொடங்கியது. இதற்கிடையே, வியாழக்கிழமை முதல் மழையின் தீவிரம் குறைய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவிலிருந்து ஈரமான காற்று மற்றும் அரேபிக் கடலில் இருந்து தென்மேற்கு காற்று வீசுவது இன்னும் இரண்டு-மூன்று நாள்களுக்கு வடமேற்கு இந்தியாவில் தொடர வாய்ப்புள்ளது என்று வானிலை நிபுணா்கள் தெரிவித்தனா்.
67.6 மி.மீ. மழை: பருவமழையின் தாக்கத்தால் தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் தொடா்ந்து இரண்டு நாள்களாக கன மழை பெய்துள்ளது. புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, மொத்தம் 67.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த மாதத்தில் இதுவரை 157.4 மி.மீ. பெய்துள்ளது. இது இயல்பை (139.10 மி.மீ) விட 13 சதவீதம் அதிகமாகும் இதேபோல பாலத்தில் 81.2 மி.மீ., லோதி ரோடில் 72 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வெப்பநிலை: இரண்டு நாள்கள் தொடா்ந்து மழை பெய்ததை அடுத்து, நகரில் வெப்பத்தின் தாக்கம் பெருமளவு குறைந்து குளிா்ந்த வானிலை நிலவயது. சஃப்தா்சங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை காலையில் குறைந்பட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 3 டிகிரி குறைந்து 24 டிகிரி செயல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவல சராசரியை விட 7 டிகிரி குறைந்து 27.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 97 சதவீதமாகவும், மாலையில் 87 சதவீதமாகவும் இருந்தது. தில்லியில் காற்றின் ஒட்டுமொத்தத் தரக்குறியீடு 43 புள்ளிகளாகப் பதிவாகி ’நன்று’ பிரிவில் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”10,000 கையொப்பங்களுடன் மனு! அரசு பதில் கட்டாயம்” புதிய அறிவிப்புகளை வெளியிட்ட விஜய்!

இந்த வாரம் கலாரசிகன் - 12-04-2026

உக்ரைன், அமெரிக்கா சரி... மீனவர் பிரச்னையில் இலங்கையிடம் மெளனம் ஏன்?

'பஞ்சலட்சணம்' படிப்போம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


