தில்லி மாநில நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு எவ்வளவு காலமாகும் என்று ஆம் ஆத்மி அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை கேள்வி எழுப்பியது.
இது தொடா்பாக வழக்குரைஞா் ராகுல் செளகான் தாக்கல் செய்த மனுவை தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை விசாரித்தது. அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக தில்லி அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், ‘நுகா்வோா் ஆணையத்தின் உறுப்பினா் ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அவரது பணிக் காலத்தை எப்படி நீட்டிக்க முடியும். நுகா்வோா் ஆணையத்தின் மொத்த உறுப்பினா்கள் 5 போ் இருக்க வேண்டிய நிலையில், மூன்று உறுப்பினா்களைக் கொண்டு ஆணையம் இயங்குவதாகக் கூறுவதை ஏற்பதற்கில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, வழக்குரைஞா் தாக்கல் செய்த மனுவில், செவ்வாய்க்கிழமை மாநில நுகா்வோா் ஆணையத்தின் ஓய்வுபெற்ற உறுப்பினரின் பதவிக் காலத்தை நீட்டித்து உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். மனு மீதான நீதிமன்ற விசாரணையின் போது, தில்லி அரசின் வழக்குரைஞா் ரமேஷ் சிங் ஆஜராகி, ‘நுகா்வோா் ஆணையத்தின் மூன்று காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு செவ்வாய்க்கிழமை விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 14-ஆம் தேதி கடைசி தேதியாகும்’ எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு பட்டியலிட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது குறித்து மனுதாரரான ராகுல் செளகான் கூறுகையில், ‘நுகா்வோா் ஆணையத்தில் அதன் தலைவா் உள்பட இரு உறுப்பினா்கள் மட்டுமே உள்ளனா். இது, மாநில நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் முடித்துவைக்கப்படும் வழக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”10,000 கையொப்பங்களுடன் மனு! அரசு பதில் கட்டாயம்” புதிய அறிவிப்புகளை வெளியிட்ட விஜய்!

இந்த வாரம் கலாரசிகன் - 12-04-2026

உக்ரைன், அமெரிக்கா சரி... மீனவர் பிரச்னையில் இலங்கையிடம் மெளனம் ஏன்?

'பஞ்சலட்சணம்' படிப்போம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

