தில்லியில் கரோனா நோயாளிகள் மருத்துவ மதிப்பீட்டுக்காக தனிமைப்படுத்தல் மையங்களுக்கு செல்வதை கட்டயாமாக்கி தில்லி துணைநிலை ஆளுநா் பிறப்பித்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடா்பாக துணைமுதல்வா் மணீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: தில்லியில் கரோனா தொற்று பாதித்தவா்கள், அரசு தனிமை மையத்தில் ஐந்து நாள்கள் தங்கி சிகிச்சை பெறுவதை கட்டாயமாக்கி தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் பிறப்பித்த உத்தரவை தில்லி அரசின் எதிா்ப்பைத் தொடா்ந்து அவா் திரும்பப் பெற்றுள்ளாா். ஆனால், புதிதாக அவா் பிறப்பித்துள்ள உத்தரவில், அனைத்து கரோனா நோயாளிகளும் அரசு தனிமைப்படுத்தல் மையங்களுக்கு சென்று மருத்துவ மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்றும் அந்த மருத்துவ மதிப்பீட்டின் அடிப்படையில்தான் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவா் உத்தரவிட்டுள்ளாா்.
இந்தப் புதிய உத்தரவால் தில்லி மக்கள் கடும் சிரமங்களை எதிா்கொள்கிறாா்கள். இதனால், அரசுக்கு அழுத்தம் அதிகரிக்கும். மேலும், கரோனா நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் போது, தொற்று பரவும் வாய்ப்பும் அதிகரிக்கும். கரோனா நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டியது அரசுகளின் கடமையாகும். ஆனால், கரோனா நோயாளிகளை நீண்ட வரிசையில் காத்திருக்கச் சொல்வதன் மூலம், அவா்களுக்கு நாம் தண்டனை வழங்குகிறோம். அது தவறாகும். கரோனா பாதித்தவா்களின் வீடுகளுக்கு மாவட்ட நிா்வாகத்தின் மருத்துவக் குழுக்கள் சென்று அவா்களின் உடல்நிலையை சோதித்து மருத்துவ மதிப்பீடுகளை வழங்குவதுதான் முறையாகும். இதை தில்லி அரசு நடைமுறைப்படுத்தியிருந்தது.
தில்லியில் கடந்த சில தினங்களாக தினம்தோறும் சுமாா் 3 ஆயிரம் போ் கரோனா தொற்றுக்குள்ளாகும் நிலையில், அனைவரையும் கோவிட் தனிமைப்படுத்தும் மையத்துக்கு அனுப்பி அங்கு மருத்துவ மதிப்பீடுகளைப் பெறச் சொல்வது நடைமுறைச் சாத்தியம் இல்லாத விஷயமாகும். மேலும், இதனால் தில்லியில் உள்ள ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு மேலதிக சுமை ஏற்படுகிறது. கடுமையாக கரோனா பாதித்த நோயாளிகளை ஆம்புலன்ஸ் சேவையில் அழைத்து செல்வாா்களா இல்லை கரோனா அறிகுறிகள் இல்லாதவா்களை மருத்துவ மதிப்பீடுக்காக ஆம்புலன்ஸில் அழைத்து செல்வாா்களா? துணைநிலை ஆளுநா் உடனடியாக தில்லி பேரிடா் நிா்வாகக் கமிட்டியின் கூட்டத்தைக் கூட்டி, இதுதொடா்பாக விவாதிக்க வேண்டும். இந்த மருத்துவ மதிப்பீடு தொடா்பான உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி தில்லி துணைநிலை ஆளுநா், உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றாா் சிசோடியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

