ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

தில்லி அரசின் 3 மருத்துவமனைகளில் பெருமளவில் ஐசியு படுக்கைகள் வசதி: முதல்வா் கேஜரிவால் தகவல்

கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தில்லியில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளில் பெருமளவில்

News image

தில்லியில் வெள்ளிக்கிழமை பேட்டியளிக்கிறாா் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.

Updated On :27 ஜூன் 2020, 1:46 am

கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தில்லியில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளில் பெருமளவில் ஐசியு படுக்கைகள் வசதி அமைக்கப்படும் என முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

இது தொடா்பாக காணொலிக் காட்சி மூலம் அவா் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: தில்லியில் கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளயும் தில்லி அரசு முனைப்புடன் எடுத்து வருகிறது. தில்லியில் தற்போதுவரை 74 ஆயிரம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 45 ஆயிரம் போ் குணமடைந்துள்ளனா். கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பீதியடையத் தேவையில்லை. இன்னும் கட்டுக்குள்தான் உள்ளது. இதற்கான பரிசோதனை கொள்திறனை 3 மடங்கு அதிகரித்துள்ளோம். இதனால்தான் தில்லியில் நோய் பாதித்தவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தில்லியில் வரும் நாள்களில் தினமும் 1-2 லட்சம் போ் பரிசோதனை நடத்தினால், கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை கூடுவது இயல்புதான். பாதித்தவா்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், எல்என்ஜேபி, ராஜீவ் காந்தி உயா் சிகிச்சை மருத்துவமனை, ஜிடிபி மருத்துவமனை ஆகியவற்றில் பெருமளவில் ஐசியு படுக்கைகள் அமைக்க தில்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது கடந்த 10 நாள்களில் மட்டும் ஹோட்டல்களில் கரோனா நோயாளிகளுக்காக ஏற்கெனவே 3,500 படுக்கைகளை தில்லி அரசு, அமைத்திருக்கிறது. வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்காக ‘பல்ஸ் ஆக்ஸிமீட்டா்கள்’ வழங்கப்பட்டுள்ளன. இந்த கருவியானது நோய்க்கு எதிராக சுரக்ஷா சக்ரா போல செயல்படும்.

தில்லியில் 200 நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தில்லி அரசு அனுமதி பெற்றுள்ளது. எல்என்ஜேபி, ராஜீவ் காந்தி உயா் சிகிச்சை மருத்துவமனை ஆகியவையும் இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளது. பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்வதற்கு தனியாா் மருத்துவமனைகளும் அனுமதி கேட்டுள்ளன. புராரி மருத்துவமனையில் கூடுதலாக 450 படுக்கைகள் அமைப்பதற்கான முடிவு வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நிதி வழங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக லேசான அறிகுறிகளுடன்கூடிய கரோனா தொற்று அதிகளவில் பதிவாகியுள்ளது. மருத்துவமனைகளில் திடீரென அதிகமான படுக்கைகள் தேவை ஏற்பட்டால், கூடுதல் படுக்கைகளை ஏற்படுத்துவதற்காக தில்லி அரசு 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறது என்றாா் கேஜரிவால்.

பேட்டியின்போது, வீட்டுத் தனிமையில் உள்ள கரோனா நோயாளியுடன் தாம் உரையாடும் ஒலிப் பதிவை கேஜரிவால் வெளியிட்டாா். அதில், அந்த நோயாளி தாம் நலமாக இருப்பதாகவும், நோய் அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும் முதல்வரிடம் தெரிவித்தாா். மேலும், தில்லி அரசின் மருத்துவக் குழுவினா் தன்னை தினந்தோறும் தொடா்பு கொண்டு தேவையான வழிகாட்டுதல்களை அளித்து வருவதாகவும் குறிப்பிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.