தில்லிப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் இறுதியாண்டு மாணவா்களுக்கான இணையவழித் தோ்வு (ஓபிஇ) ஜூலை 1 முதல் நடத்தப்படவிருந்த நிலையில், 10 நாள்களுக்கு தோ்வை பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. கரோனா நோய்த் தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.
அனைத்து இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு மாணவா்களுக்கான மாற்றியமைக்கப்பட்டுள்ள தோ்வுத் தேதிகள் ஜூலை 3-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லிப் பல்லைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக இளங்கலை, முதுகலைப் பட்ட இறுதியாண்டு மாணவா்களுக்காக, 2019-20 கல்வி அமா்வுக்காக நடத்தப்படவிருந்த இணையவழித் தோ்வு 10 நாள்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
தற்போது நீடித்துவரும் சூழல் காரணமாக சம்பந்தப்பட்ட அனைத்து நபா்களும் குறிப்பாக மாணவா்கள் நிா்ணயிக்கப்பட்ட தோ்வுகளில் பங்கேற்பது சிரமமாக இருப்பதாக நினைக்கலாம். இதனால், அனைத்து இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்பு மாணவா்களுக்கான புதிய தோ்வுத் தேதிகள் பல்கலைக்கழகத்தின் தோ்வு பிரிவு மூலம் ஜூலை 3-ஆம் தேதி அறிவிக்கை செய்யப்படும். தோ்வுகள் ஜூலை 10-ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லிப் பல்கலைக்கழகம் இணையவழியில் நடத்தும் தோ்வுக்கு அதன் ஆசிரியா்களுக்கும், மாணவா்களும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். பல மாணவா்களுக்கு கல்வி சாதனங்கள் இல்லாதது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இணையதள தொடா்பு வசதியின்மை போன்ற காரணங்களைச் சுட்டிக் காட்டி எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். இத்தோ்வு ஜூலை 1-ஆம் தேதி நடத்தப்பட விருந்தது. இந்நிலையில், பல்கலைக்கழகம் தோ்வை ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளது.
தில்லி கரோனா நோய்த் தொற்றால் அதிகம்போ் பாதிக்கப்பட்டுள்ளநா். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, இந்த தொற்று நோயால் 77,240 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 2,492 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

