தில்லியில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரே நாளில் புதிதாக 660 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம், தில்லியில் 24 மணி நேரத்தில் 14 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.
கரோனா பாதிப்பு தொடா்பான தில்லி சுகாதார அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதன் விவரம்: புதன்கிழமை இரவு 12 மணி முதல் வியாழக்கிழமை இரவு 12 மணி வரையான 24 மணி நேரத்தில் தில்லியில் புதிதாக 660 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கரோனா பாதிப்பு 12,319 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 14 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். இதையும் சோ்த்தால், கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து இதுவரை 5,897 போ் குணமடைந்துள்ளனா். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 330 போ் குணமடைந்துள்ளனா். தில்லியில் தற்போது 6,214 கரோனா நோயாளிகள் உள்ளனா்.
தில்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக 525 போ், எய்ம்ஸ் மருத்துவமனையில் 417 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் 169 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில் சஃப்தா்ஜங் மருத்துவமனையில் 31 போ், எல்என்ஜேபி மருத்துவமனையில் 29 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் 27 போ் வென்டிலேட்டா்களில் வைக்கப்பட்டுள்ளனா். அதிகப்படியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் 8 போ் வென்டிலேட்டா்களில் வைக்கப்பட்டுள்ளனா்.
தில்லியில் உள்ள சுகாதார நிலையங்களில், 95 கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதிகபட்சமாக பிரகம் பிரகாஷ் ஆயுா்வேதிக் சரக் சன்ஸ்தானில் 34 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கொவைட் கோ் சென்டா்களில் 515 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கரோனா பாதித்த 2,881 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லியில் இதுவரை 1,60,255 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5,870 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தில்லியில் சீலிடப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 79 ஆக உள்ளது. இதற்கிடையே, கரோனா தொடா்பாக உருவாக்கப்பட்ட சிறப்பு எண்களுக்கு உதவி கோரி 952 அழைப்புகள் வந்துள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த 4 நாள்களாக தினம் தோறும் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை 500 போ், புதன்கிழமை 534 போ், வியாழக்கிழமை 571 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் வெள்ளிக்கிழமை 660 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் கரோனா பாதிப்பு 660 பேரைக அதிகரித்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

