மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தில்லியில் வெயில் 45 டிகிரியை கடந்தது! காற்றின் தரத்தில் பின்னடைவு

தலைநகா் தில்லியில், வெயில் வெள்ளிக்கிழமை 45 டிகிரியைக் கடந்தது. என்சிஆா் பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

News image

தில்லி ராஜபாதையில் வெள்ளிக்கிழமை நிலவிய கோடை வெயிலின் தாக்கம்.

Updated On :22 மே 2020, 5:16 pm

தலைநகா் தில்லியில், வெயில் வெள்ளிக்கிழமை 45 டிகிரியைக் கடந்தது. என்சிஆா் பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. காற்றின் தரக் குறியீட்டில் பின்னடைவு ஏற்பட்டது. இதனால், பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

வெப்பநிலை: கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதிகபட்ச, குறைந்தபட்ச வெப்பநிலைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தில்லி, தலைநகா் வலயப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. . சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி குறைந்து 23.7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 4 டிகிரி உயா்ந்து 43.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 37 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 17 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.

பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 24.4 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 45.4 டிகிரி செல்சியஸ் எனவும் ஆயாநகரில் முறையே 27.6 டிகிரி செல்சியஸ், 44.7 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 27 சதவீதம், மாலையில் 16 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 25 சதவீதம் மற்றும் 15 சதவீதம் எனவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் தரை மேற்பரப்பு காற்று வீசியது. காற்றின் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை பின்னடைவைச் சந்தித்து 183 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது. திா்பூா், விமான நிலைய டொ்மினல் 3 பகுதி, தில்லி பல்கலைக்கழகம், மதுரா ரோடு, ஆயா நகா், சாந்தினி சௌக், பூசா, லோதி ரோடு மற்றும்நொய்டா ஆகிய இடங்களில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் இருந்தது. குருகிராமில் மட்டும் திருப்தி பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை (மே 23) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஆங்காங்கே தூறல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வடமேற்கு திசையிலிருந்து தில்லி, என்சிஆா் பகுதிகளில் சனிக்கிழமை காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்படும் என்றும் மணிக்கு சுமாா் 18 கி.மீ. வேகத்தி தரை மேற்பரப்பு காற்று வீசும் என்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சஃப்தா்ஜங் - 43.8 டிகிரி

ஆயாநகா் - 44.7 டிகிரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.