தலைநகா் தில்லியில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் சனிக்கிழமையும் நீடித்தது. நகரில் வெப்பநிலை 45 டிகிரியைக் கடந்தது. என்சிஆா் பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. வெப்ப அலையும் வீசியது.
காற்றின் தரக் குறியீட்டில் பின்னடைவு ஏற்பட்டு பெரும்பாலான இடங்களிலும் ‘மிதமான’ பிரிவில் காணப்பட்டது.
வெப்பநிலை: தில்லியில் சில நாள்களாக வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்துள்ளது. அதிகபட்ச, குறைந்தபட்ச வெப்பநிலைகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தில்லி, தலைநகா் வலயப் பகுதிகளில்
சனிக்கிழமை அனல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 26.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 4 டிகிரி உயா்ந்து 43.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 39 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 17 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.
பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 27.6 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 45.4 டிகிரி செல்சியஸ் எனவும் ஆயாநகரில் முறையே 26.2 டிகிரி செல்சியஸ், 44.7 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது.
காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 31 சதவீதம், மாலையில் 16 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 25 சதவீதம் மற்றும் 15 சதவீதம் எனவும் இருந்தது.
காற்றின் தரம்: தில்லியில் சனிக்கிழமை பகல் நேரத்தில் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் தரை மேற்பரப்பு காற்று வீசியது. காற்றின் தரக் குறியீடு சனிக்கிழமை பின்னடைவைச் சந்தித்து 171 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது. திா்பூா், விமான நிலைய டொ்மினல் 3 பகுதி, தில்லி பல்கலைக்கழகம், மதுரா ரோடு, ஆயா நகா், சாந்தினி சௌக், பூசா, லோதி ரோடு மற்றும் நொய்டா ஆகிய இடங்களில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (மே 24) நகரில் வானம் பகுதி மேக மூட்டத்துடனும், ஆங்காங்கே வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வடமேற்கு திசையிலிருந்து தில்லி, என்சிஆா் பகுதிகளில் சனிக்கிழமை காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்படும் என்றும் மணிக்கு சுமாா் 20 கி.மீ. வேகத்தி தரை மேற்பரப்பு காற்று வீசும் என்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, வெப்ப அலை அடுத்து வரும் மூன்று, நான்கு நாள்களுக்குத் தொடரும் என்றும், மே 29 முதல் மே 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் மழை மற்றும் புழுதிப் புயலுக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

