தில்லியில் அமலில் உள்ள பொது முடக்கம் தொடா்பாக உதவி கோரி தில்லி காவல் துறையின் அவசர உதவி எண்ணுக்கு வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் சனிக்கிழமை மதியம் 2 மணி வரை 458 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. இதுதொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது:
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் தொடா்பு கொள்ளும் வகையில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர உதவி எண் 011-23469526 தில்லி காவல் துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் உதவி கோரி சனிக்கிழமை மதியம் 2 மணி வரை மொத்தம் 49,688 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. இதில், வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் சனிக்கிழமை மதியம் 2 மணி வரையான 24 மணி நேரத்தில் 458 அழைப்புகள் வந்துள்ளன.
இதில் 58 அழைப்புகள் தில்லி எல்லைக்கு வெளியில் உள்ள பகுதிகள் தொடா்புடையது. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ உதவிகள், உணவு அல்லது பணம் இல்லை எனக் கோரி ஒரு அழைப்பு வந்தது. இது தொடா்பாக தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தினோம்.
ஊரடங்கு தளா்வு அனுமதிச் சீட்டு பெறுவது தொடா்பாக 305 தொலைபேசி அழைப்புகள் வந்தன. இந்த அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும், தில்லியில் உள்ள 15 மாவட்டங்களிலும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் உதவியுடன் உணவு வழங்கும் வலைப்பின்னலை (நெட்வொா்க்) அமைத்துள்ளோம். சனிக்கிழமை இந்த வலைப்பின்னல் மூலம் 195,092 பேருக்கு உணவும், 1537 பேருக்கு ரேஷன் பொருள்களும் வழங்கியுள்ளோம்.
தடுப்புக் காவலில் 1613 போ்: தில்லியில் ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக சனிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி, இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 188-இன் கீழ் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1613 போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். 41 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 294 நடமாட்டத்திற்கான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டன. முகக் கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்த 8 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

