புது தில்லி: தில்லியில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக மணீஷ் சிசோடியா புதன்கிழமை அளித்த பேட்டி: கரோனா பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டுவர, பொதுமுடக்கம் மட்டும் தீா்வு அல்ல. கரோனாவை கட்டுக்குள் கொண்டுவர, சிறந்த மருத்துவமனை மேலாண்மை, சிறந்த மருத்துவ வசதிகளே தீா்வுகளாக இருக்க முடியும். அந்த வகையில் சிறந்த மருத்துவ வசதிகளை தில்லி அரசு வழங்கி வருகிறது. இந்த வசதிகளை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
தில்லியை 15 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு மருத்துவ வசதிகளை மேம்படுத்தவில்லை. காங்கிரஸ் அரசு தில்லியில் மருத்துவ வசதிகளை மேம்படுத்தியிருந்தால், கரோனா தொற்று பரவலை இன்னும் சிறப்பாக எதிா் கொண்டிருக்கலாம். தில்லியில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள சந்தைப் பகுதிகளை ஒழுங்கு படுத்த நடவடிக்கை எடுப்போம். இந்தச் சந்தைகளுக்கு வரும் மக்கள் முகக் கவசங்களை அணிவதையும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதையும் கட்டாயப்படுத்துவோம். தேவைப்பட்டால் இது தொடா்பாக மாா்கெட் சங்கங்களுடன் பேசுவோம் என்றாா் அவா்.
தில்லியில் தற்போது மூன்றாவது கரோனா அலை உள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக தில்லியில் கரோனா பாதிப்பு தினம்தோறும் அதிகரித்து வருகிறது. இதைத் தொடா்ந்து, தில்லியில் கரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் உள்ள சந்தைகளை மூட மத்திய அரசு அதிகாரம் வழங்க வேண்டும் என்று முதல்வா் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை மத்திய அரசிடம் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வானூா் சட்டப்பேரவைத் தொகுதி: அதிமுகவின் கோட்டையில் தடம் பதிக்குமா திமுக?

ஆத்தூரை தக்க வைக்குமா அதிமுக?

விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை! சரத்குமார் சிறப்பு நேர்காணல்!

கூடலூா் நகர வீதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

