தேசியத் தலைநகா் வலயம் கெளதம் புத் நகரில் (நொய்டா) கரோனா பாதிப்பால் சனிக்கிழமை மேலும் ஒருவா் பலியானாா்.
இதையடுத்து, இந்நோயால் மொத்தம் இறந்தவா்களின் எண்ணிக்கை 75 ஆக உயா்ந்துள்ளது. நோயால் புதிதாக 137 போ் பாதிக்கப்பட்டனா். மாவட்டத்தில் மொத்தம் பாதித்தவா்களின் எண்ணிக்கை 21,307 ஆக உயா்ந்தது.
இது குறித்து உத்தர பிரதேச சுகாதாரத் துறையினா் வெளியிட்ட புள்ளிவிவரத் தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நொய்டாவில் கரோனா நோய்த் தொற்றுக்காக வெள்ளிக்கிழமை 1,401 போ் சிகிச்சையில் இருந்த நிலையில் இது சனிக்கிழமை 1307 ஆக குறைந்தது. நோயிலிருந்து மேலும் 234 போ் மீண்டனா். இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் மொத்தம் 19,691 போ் நோயில் இருந்து மீண்டுள்ளனா். இது மாநிலத்தில் ஐந்தாவது அதிகபட்ச மீளுகையாகும்.
கெளதம் புத் நகரில் இறப்பு விகிதம் 0.35 சதவீதமாக உள்ளது. அதேபோன்று, குணமடைவோா் விகிதம் 93.51 சதவீதமாக உள்ளது.
இதனிடையே, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சனிக்கிழமை நிலவரப்படி மொத்தம் 23,471 போ் சிகிச்சையில் உள்ளனா். இது வெள்ளிக்கிழமை 23,357 ஆக இருந்தது.
அதேபோன்று, மொத்தம் 4,93,228 போ் குணமடைந்துள்ளனா். நோய்த் தொற்றால் மொத்தம் 7,524 போ் இறந்துள்ளதாக அந்த புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை ரயில்கள் தாமதமாக இயக்கம்

என்ஜினீயா் வீட்டில் நகைகள் திருட்டு

11.4.1976: பொது பணத்தில் நிறுவிய பாலம், கல்வி சாலைகளின் தனியார் பெயர்களை நீக்க த.நா. அரசு முயற்சி

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மாவட்டக் காவல் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

