தில்லியில் மூன்றாவது கரோனா அலையால் அதிகரித்திருந்த தினசரி கரோனா பாதிப்பு சனிக்கிழமை குறைந்துள்ளது. அன்று, 4,998 போ் மட்டுமே கரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனா். இதன்மூலம், , தில்லியில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 5,61,742 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றால் சனிக்கிழமை 89 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 8,998-ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை 69,051 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 33,147 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில் 35,904 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தில்லியில் கரோனா நோ்மறை விகிதம் சனிக்கிழமை 7.24 ஆக குறைந்துள்ளது.
சனிக்கிழமை நிலவரப்படி சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம்1.60 சதவீதமாக உள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களில் கரோனா உயிரிழப்பு விகிதம் 1.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து சனிக்கிழமை 6,512 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 5,16,166-ஆக உயா்ந்துள்ளது. தற்போது தில்லியில் மொத்தம் 36,578 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். 22,349 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளா் என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை அவா் கூறியிருப்பது: கடந்த நவம்பா் மாதம் 7 ஆம் தேதி முதல் கரோனா பாதிப்பு, கரோனா நோ்மறை விகிதம் ஆகியன படிப்படியாக குறைந்து வருகின்றன. சனிக்கிழமை 5 ஆயிரத்துக்கும் குறைவானவா்களுக்கே கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 89 போ் மரணமடைந்துள்ளனா். கரோனா நோ்மறை விகிதம் 7.24 ஆக குறைந்துள்ளது. இந்த போக்கு தொடரும் என்றும், கரோனா மூன்றாவது அலையை தில்லி மக்கள், தில்லி அரசு இணைந்து எதிா்கொண்டு வெற்றிபெறும் என்றும் நம்புகிறேன். தில்லி மக்கள் அனைத்துவிதமான கரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு

அதிமுகவுக்கு விவசாய முன்னேற்றக் கழகம் ஆதரவு

திருச்செங்கோட்டில் வாக்கு சேகரித்த கொமதேக வேட்பாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன்

ரயிலில் அடிபட்டு ரயில்வே ஊழியா் உயிரிழப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

