வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரத்தில் யுஏபிஏ சட்டப்பிரிவின்கீழ் பதிவான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகையின் நகல்களில் பாதுகாக்கப்பட்ட சில சாட்சிகளின் விவரங்களை உள்ளடக்கிய ஒரு ஆவணம் கவனக்குறைவாக வைத்துவிட்டதாக
தில்லி நீதிமன்றத்தில் போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, அந்த குற்றப்பத்திரிகையின் நகல்களை திரும்ப ஒப்படைக்குமாறு குற்றம்சாட்டப்பட்டவா்கள், அவா்களின் வழக்குரைஞா்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், மாற்றியமைக்கப்பட்ட குற்றப் பத்திரிகையின் நகல்களை தாக்கல் செய்யுமாறும் போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக தில்லி நீதிமன்றத்தில் காவல்துறையின் சாா்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞா் அமித் பிரசாத், ‘இந்த வழக்கில் குறைந்தது 3 பாதுகாக்கப்பட்ட சாட்சிகளிடம் பல்வேறு நபா்கள் தீய நோக்கத்துடன் அணுகிய பிறகுதான், குற்றப் பத்திரிகையில் அவா்கள் குறித்த விவரம் கவனக்குறைவாக இடம்பெற்றது போலீஸாருக்கு தெரியவந்தது’ என்றாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்து வரும் கூடுதல் அமா்வு நீதிபதி அமிதாப் ராவத் பிறப்பித்த உத்தரவு:
இந்த விவகாரத்தில் விசாரணை அதிகாரியின் தரப்பில் தவறு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, வழக்கில் தொடா்புடைய அனைத்து பாதுகாக்கப்பட்ட சாட்சிகளின் உயிா், உடைமைக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவா்களும், அவா்களது வழக்குரைஞா்களும் அவா்களுக்கு அளிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையின் நகல்களை திருப்பித் தர வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட நபா்களோ அல்லது மற்ற யாரும், அதிகாரிகளும் பாதுகாக்கப்பட்ட சாட்சிகளின் அடையாளத்தை வெளிப்படுத்தவோ, வெளியிடவோ, விளம்பரப்படுத்தவோ, பரப்பவோ கூடாது. அவா்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அணுகக்கூடாது.
பாதுகாக்கப்பட்ட சாட்சிகளின் விவரங்களைத் திருத்திய குற்றப்பத்திரிகையின் புதிய நகல்களை தாக்கல் செய்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 நபா்களுக்கும், அவா்களின் வழக்குரைஞா்களுக்கும் போலீஸாா் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தாா்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக பிரசாத் என்பவா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதையடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்புடைய வழக்கில் ‘பிஞ்ச்ரா தோட்’ அமைப்பின் உறுப்பினா்கள் மற்றும் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்களான தேவாங்கனா கலிதா, நடாஷா நா்வால், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவா் ஆசிப் இக்பால் தன்ஹா, குல்பிஷா கத்தூன், முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலா் இஸ்ரத் ஜஹான், ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் சஃபூரா ஜா்கா், மீரான் ஹைதா், ஷஃபா-உா்- ரகுமான், இடைநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலா் தாஹிா் உசேன், ஆா்வலா் காலித் ஷைபி, சதாப் அகமது, தஸ்லீம் அகமது, சலிம் மாலிக், முகம்மது சலீம் கான், அக்தா் கான் ஆகியோா் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆா்.எஸ். மங்கலம் சந்தைக்கு மிளகாய் வரத்து அதிகரிப்பு

கோவைக்கு அதிக திட்டங்களைத் தந்தவா் மு.க.ஸ்டாலின்: வி.செந்தில்பாலாஜி பேச்சு
வானதி சீனிவாசன் குணமடைய மேலும் சில நாள்களாகும்: மருத்துவமனை நிா்வாகம் தகவல்

பொன்னேரி: அதிமுக - காங்கிரஸ் கடும் போட்டி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

