எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தில்லி குருத்வாரா கமிட்டி தோ்தல்: வாக்காளா் திருத்தப் பட்டியலுக்கான மென்பொருள் அறிமுகம்

தில்லி குருத்வாரா நிா்வாகக் கமிட்டிக்கான தோ்தலில், திருத்தப்பட்ட வாக்காளா் பட்டியலை தயாரிக்கும் வகையிலான மென்பொருளை தில்லி குருத்வாரா தோ்தல் அமைச்சா் ராஜேந்திர பால் கெளதம் அறிமுகப்படுத்தி வைத்தாா்.

Updated On :22 அக்டோபர் 2020, 7:35 pm


புது தில்லி: தில்லி குருத்வாரா நிா்வாகக் கமிட்டிக்கான தோ்தலில், திருத்தப்பட்ட வாக்காளா் பட்டியலை தயாரிக்கும் வகையிலான மென்பொருளை தில்லி குருத்வாரா தோ்தல் அமைச்சா் ராஜேந்திர பால் கெளதம் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தி வைத்தாா்.

இது தொடா்பாக அவா் தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அளித்த பேட்டி: கரோனா தொற்று நிலவுவதால், தில்லி சீக்கிய குருத்துவாரா நிா்வாகக் கமிட்டிக்கான தோ்தலின் பெரும்பாலான பணிகளை இணையம், மென்பொருளின் உதவியுடன் நடத்தவுள்ளோம். இந்தத் தோ்தலுக்கான ஆன்லைன், ஆஃப் லைன் பணிகள் தொடங்கிவிட்டன. வரும் நவம்பா் மாதம் 20 ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம்.

திருத்தப்பட்ட வாக்காளா் பட்டியலை தயாரிக்கும் வகையில் மென்பொருளை தயாரித்துள்ளோம். இந்த மென்பொருள் மூலம் தில்லியில் வாழும் சீக்கியா்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இந்த மென்பொருளை தில்லி அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிறுவனமான டிஇ-ஜிஎஸ் தயாரித்துள்ளது. இணையத்தளத்தின் உதவியுடன், வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்படும்.

வாக்காளா்கள் இந்த இணையத்தளத்தில், தமது செல்லிடப்பேசியைப் பயன்படுத்தி தமது விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். வேட்பாளா்கள் தமது வயது, முகவரி உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் அந்த இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தில்லி சீக்கிய குருத்துவாரா கமிட்டிக்கு கடந்த 2017 பிப்ரவரி மாதம் தோ்தல் நடந்தது. அடுத்த தோ்தல் வரும் 2021 மாா்ச் மாதம் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.