எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கரோனா தடுப்பூசி நாடுமுழுவதும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்: கேஜரிவால்

நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

Updated On :25 அக்டோபர் 2020, 1:49 am

நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும். இது நாட்டு மக்களின் அடிப்படை உரிமையாகும். கரோனா தொற்றால் நாட்டு மக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

பிகாா் தோ்தலில் வெற்றிபெற்றால் மாநில மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பாஜக தனது தோ்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

கரோனா தடுப்பூசியை மத்திய அரசு நேரடியாகக் கொள்முதல் செய்து முன்னுரிமை அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.