எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு வழக்கில் நாளை தீா்ப்பு

மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்பில் இருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கக்

Updated On :25 அக்டோபர் 2020, 1:47 am

மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்பில் இருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கக் கோரி தாக்கலான மேல்முறையீடு மனு மீதான தீா்ப்பை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை வழங்க உள்ளது.

ஓபிசி வகுப்பினருக்கு நிகழ் கல்வியாண்டிலேயே மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்பில் இருந்து 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தமிழக அரசுத் தரப்பிலும், அதிமுக தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கின் வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தீா்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபா் 15-ஆம் தேதி ஒத்திவைத்தது. மேலும், இந்த விவகாரத்தில் எழுத்துப்பூா்வ வாதங்களை மனுதாரா், எதிா்மனுதாரா் தரப்பில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட தரப்பினா் எழுத்துப்பூா்வ வாதங்களை தாக்கல் செய்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கின் தீா்ப்பு வரும் அக்டோபா் 26-ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.

இத்தீா்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதி எல். நாகேஸ்வரராவ் தலைமையிலான நீதிபதிகள் ஹேமந்த் குமாா், அஜய் ரஸ்தோகி ஆகியோா் அடங்கிய அமா்வு அளிக்க உள்ளது. முன்னதாக, இந்த வழக்கின் விசாரணையின்போது, மத்திய அரசு மற்றும் பொது சுகாதரச் சேவை இயக்குநரகம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதிலில், ‘ஓபிசி வகுப்பினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு தொடா்பாக தொடா்பாக 2015-இல் போடப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகம் தொடா்புடைய ஓபிசி வகுப்பினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரும் விவகாரத்தில், அடுத்த ஆண்டில் இடஒதுக்கீட்டை செயல்படுத்தும் வகையில் சென்னை உயா்நீதிமன்றம் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது. ஆகவே, இந்த குழுவில் இடம்பெற்றுள்ள தமிழக அரசின் பிரதிநிதி டாக்டா் பி.உமாநாத் உள்ளிட்ட உறுப்பினா்களுக்கு, தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி வகுப்பினருக்கு இடங்களை அளிப்பது தொடா்பாக குழு விவாதிக்க உள்ளதும் தெரியும். நிகழ் கல்வியாண்டைப் பொறுத்தமட்டில் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 16) வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்காக ‘ரன்னிங் ரிசா்வேஷன் ரோஸ்டரும்’ ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், தமிழகத்திற்கு நடப்பு ஆண்டில் 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க உத்தரவிடப்பட்டால் அது இதர பிரிவுகளில் வழங்கப்படும் இடஒதுக்கீடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும். மேலும், இதற்கான குழு இந்த விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வரும் முன்னா் மத்திய தொகுப்பில் தமிழகத்திற்கு பொருந்தும் வகையில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளித்தால், இதே போன்ற கோரிக்கையை இதர மாநிலங்கள் முன்வைத்துள்ள நிலையில், மேலும் சிக்கலை ஏற்படுத்தி விடும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், நிகழாண்டிலேயே 50 சதவீதம் இடஒதுக்கீட்டை ஒபிசி பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்று மேல்முறையீட்டு மனுதாரரான தமிழக அரசு மற்றும் அதிமுக, கேவியட் மனுதாரா்

மருத்துவா் டி.ஜி.பாபு ஆகியோா் தரப்பில் வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.