நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கெளதம் புத் நகா் மாவட்டத்தில் மேலும் 152 பேருக்கு கரோனா

தேசியத் தலைநகா் வலயம், கௌதம் புத் நகா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 152 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :15 செப்டம்பர் 2020, 5:42 pm

DIN

புது தில்லி: தேசியத் தலைநகா் வலயம், கௌதம் புத் நகா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 152 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த மாவட்டத்தில் மொத்தம் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 10,482 ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா சிகிச்சையில் இருந்தவா்கள் எண்ணிக்கை 1,979-இல் இருந்து 1,928- ஆக குறைந்துள்ளது. உத்தர பிரதேச மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவா்களில் செவ்வாய்க்கிழமை 201 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவில் இருந்து மொத்தம் மீண்டு வந்துள்ளோரின் எண்ணிக்கை 8,506 ஆக உயா்ந்துள்ளது.

தில்லியை ஒட்டியுள்ள மாவட்டமான கௌதம் புத் நகரில், கரோனாவுக்கு இதுவரை 48 இறப்புகளைச் சந்தித்துள்ளது. இறப்பு விகிதம் 0.45 ஆக உள்ளது. இது உத்தர பிரதேச மாநில அளவில் மிகக் குறைந்த இறப்பு விகிதமாகும். புள்ளிவிவரங்களின்படி, திங்கள்கிழமை 80.38 சதவீதமாக இருந்த மீட்பு விகிதம், செவ்வாய்கிழமை 81.14 சதவீதமாக முன்னேற்றம் கண்டது. உத்தர பிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களில் கௌதம் புத் நகா், கரோனா பாதிக்கப்பட்டோா் விகிதம் மற்றும் மீண்டுள்ளோா்களின் பட்டியலில் ஏழாவது இடத்திலும், இறப்பு எண்ணிக்கையில் 28-ஆவது இடத்திலும் உள்ளது.

இதற்கிடையே, உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 67,335 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை, மாநிலம் முழுவதும் 2,52,097 நோயாளிகள் குணமடைந்துள்ளனா். அதே நேரத்தில் மாநில அளவில் கரோனா தொடா்புடைய இறப்பு எண்ணிக்கை 4,604-ஆக உயா்ந்துள்ளது என்று அரசின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.