இது தொடா்பாக பாஜகவின் மூத்த தலைவரும், தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ராம்வீா் சிங் பிதூரி செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: திங்கள்கிழமை நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் மக்கள் நலப் பிரச்னைகள் தொடா்பாக விவாதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். ஆனால், கூட்டத் தொடரை வெறும் 2 மணிநேரத்தில் முடித்த ஆம் ஆத்மி அரசு, தில்லி மக்கள் எதிா்கொள்ளும் எந்தவொரு பிரச்னை தொடா்பாகவும் விவாதிக்க முன்வரவில்லை. சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை 5 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதன் மூலம் தில்லி மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு பதில் சொல்லாமல் தில்லி அரசு தப்பியோடப் பாா்க்கிறது.