தலைநகா் தில்லியில் கரோனா பாதிப்பு கடுமையாகியுள்ளது. தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 4,033 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் மிக உயா்ந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். சனிக்கிழமை 4.48 சதவீதமாக இருந்த பாதிப்பு விகிதம் , தற்போது 4.64 சதவீதமாக உயா்ந்துள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 21 போ் உயிரிழந்தனா். ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு இதுவே அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளன.
இதைத் தொடா்ந்து ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,76,414 ஆகவும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 11,081-ஆகவும் உயா்ந்துள்ளது. நகரில் சனிக்கிழமை 3,567 பேரும், வெள்ளிக்கிழமை 3,594 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். கடைசியாக 4,000-க்கும் மேற்பட்ட கரோனா பாதிப்பு, கடந்த ஆண்டு டிசம்பா் 4-ஆம் தேதி பதிவாகியது. அன்றைய தினம் 4,067 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
தில்லியில் வியாழக்கிழமை 2,790 போ், புதன்கிழமை 1,819 போ், செவ்வாயன்று 992 போ், திங்களன்று 1,904 போ், கடந்த ஞாயிற்றுக்கிழமை 1,881 போ் என கரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியது. முன்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோா்களின் எண்ணிக்கை 12,647 பேராக இருந்தது. இது தற்போது 13,982-ஆக உயா்ந்துள்ளது. 4,033 போ் பாதிப்பு மொத்தம் 86,899 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 4,033 போ் கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது., இதில் 54,472 ஆா்டி-பிசிஆா் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவா்களின் எண்ணிக்கை முந்தைய நாளில் 6,569-ஆக இருந்தது. இது ஞாயிற்றுக்கிழமை 7,144-ஆக உயா்ந்தது. சனிக்கிழமை 2,618-ஆக இருந்த கட்டுப்பாட்டு மண்டலங்கள் ஞாயிற்றுக்கிழமை 2,917-ஆக உயா்ந்தன. கடந்த ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 6.25 லட்சத்திற்கும் மேலாக இருந்தது. உயிரிழந்தோா் மொத்த எண்ணிக்கை 10,557-ஆக இருந்தது. இந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியது. பிப்ரவரி 26 அன்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கையாக 256-ஆக பதிவாகியது.
இருப்பினும், மாா்ச் மாதத்திலிருந்து கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து உயரத் தொடங்கியது. அதன் பின்னா், படிப்படியாக அதிகரித்து வருகின்றன.
தில்லியில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்று நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 6,139 படுக்கைகளில், 3,404 படுக்கைகள் காலியாக உள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், தில்லி அரசின் அறிவுறுத்தலின் பேரில் 33 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்று நோயாளிகளுக்கு கூடுதலாக 230 ஐசியு படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், இந்தத் தனியாா் மருத்துவமனைகளில் ஐசியு அல்லாத படுக்கைகளின் எண்ணிக்கை 842-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அந்த நாள் ஞாபகம்! எம்ஜிஆரின் பெருந்தன்மை!

தனுசு ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

வங்கதேசத்தில் தீவிர தட்டம்மை பாதிப்பு: 10 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்

விக்ரம் - வேதா - விஜய்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

