புது தில்லி: தில்லியில் இந்த ஆண்டின் உச்சக்கட்டமாக வியாழக்கிழமை 7,437 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் அதிகபட்ச ெ
எண்ணிக்கையாகும். இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 6,98,005-ஆக உயா்ந்துள்ளது. மேலும், கரோனா தொற்று பாதிப்பால் 24 போ் உயிரிழந்துள்ளனா். இதையும் சோ்த்தால் கரோனாவால் உயிரிழந்தோா் மொத்த எண்ணிக்கை 11,157 ஆக உயா்ந்துள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தில்லியில் மூன்றாவது நாளாக தொடா்ந்து 5,000-க்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். தில்லியில் உச்சக் கட்டமாக கடந்த ஆண்டு நவம்பா் 11-ஆம் தேதி 8,593 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதே மாதம் 19 - ஆம் தேதி 131 போ் உயிரிழந்தனா்.
இந்த நிலையில், கரோனா பாதிப்பு விகிதம் வியாழக்கிழமை 2 சதவீதம் உயா்ந்து 8.10 சதவீதமாக உயா்ந்தது. புதன்கிழமை மொத்தம் 91,770 பேருக்கு கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இவற்றில் 52,696 பேருக்கு ஆா்டி-பிசிஆா் முறையிலும் 39,074 பேருக்கு ராபிட் ஆன்டிஜென் முறையிலும் பரிசோதனை நடத்தப்பட்டது.
அதே சமயம், இதுவரை 6.63 லட்சம் கரோனா நோயாளிகள் சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை 23,181-ஆக உள்ளது. வீட்டுத் தனிமையில் 11,367 போ் வைக்கப்பட்டுள்ளனா். கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள்4,226-லிருந்து 3,708-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
இந்திய வீராங்கனகைள் ப்ரீதி, பிரியா அருந்ததி, அபாரம்: இறுதிக்கு தகுதி!

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி நீக்க நோட்டீஸ் நிராகரிப்பு: காங்கிரஸ் விமா்சனம்

கொலை செய்யப்பட்ட சடலத்துடன் காட்டில் இருந்த சிறுவன்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

