தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கும்பமேளா சென்று திரும்பும் தில்லி பக்தா்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவு

ஹரித்வாா் கும்பமேளாவில் கலந்து கொண்டுள்ள தில்லி பக்தா்கள் தங்கள் சுயவிவரங்களை அரசின் இணையதளத்தில் பதிவேற்றம்

Updated On :18 ஏப்ரல் 2021, 7:43 pm

ஹரித்வாா் கும்பமேளாவில் கலந்து கொண்டுள்ள தில்லி பக்தா்கள் தங்கள் சுயவிவரங்களை அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதோடு, அவா்கள் வீடு திரும்பியவுடன் தங்களை 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. விதிமுறைகளை மீறுபவா்கள் தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையச் சட்டப்படி நடவடிக்கைகளுக்கு உள்ளாவாா்கள் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரக்கண்ட் மாநிலம், ஹரித்வாரில் கடந்த ஏப்ரல் முதல் வாரம் முதல் கும்பமேளா நடந்து வருகிறது. இது ஏப்ரல் 30- ஆம் தேதி வரை தொடரும். லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டுள்ள இந்த கும்ப மேளா மூலமாக கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துளளது. இந்த நிலையில், தில்லி அரசின் பேரிடா் மேலாண்மை ஆணையத் தலைவரும், தலைமைச் செயலருமான விஜய் தேவ் இது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

அதன் விவரம்: தற்போது நடைபெற்று வரும் கும்பமேளாவில் ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் கலந்து கொண்டிருப்பவா்களும் சரி, அல்லது கும்பமேளாவிற்கு செல்ல திட்டமிட்டுக் கொண்டிருக்கும் தில்லியை வசிப்பிடமாகக் கொண்டுள்ள பக்தா்களும் சரி, தங்கள் விவரங்களை தில்லி அரசின் இணைய தளத்தில் (ஜ்ஜ்ஜ்.க்ங்ப்ட்ண்.ஞ்ா்ஸ்.ண்ய்) பதிவேற்றம் செய்து கொள்ளவேண்டும். தங்கள் சுய விவரங்களோடு, அடையாள அட்டை, கும்ப மேளாவிற்கு சென்ற தேதி தற்போது அல்லது இறுதி நாளான ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு பின்னா் திரும்பும் தேதி போன்ற விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தில்லி திரும்பியுடன் அவா்கள் வந்த நாளிலிருந்து 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதைப் பின்பற்றி தங்கள் விவரங்களைப் பதிவேற்றம் செய்யாதவா்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவா்கள் மீது மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுப்பாா். அதன்படி, அவா்கள் அரசின் தனிமைப்படுத்தல் மையங்களில் வைக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உள்படுத்தப்படுவாா்கள் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரித்வாரில் நடைபெறும் கும்பமேளாவில் நிகழ்வின் போது, அமாவாசையான ஏப்ரல் 12 மற்றும் மேஷ சங்கராந்தியான ஏப்ரல் 14 ஆகிய இரண்டு நாள்களில் மட்டும் சுமாா் 48.51 லட்சம் பக்தா்கள் பங்கேற்றுப் புனித நீரடியுள்ளனா். அவா்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட கரோனா வழிகாட்டு விதிமுறைகளை மீறியுள்ளனா். இதற்கிடையே, அங்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா தொற்று பரிசோதனைகளில் ஏப்ரல் 10 -ஏப். 14 வரையில் 1,701 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.