சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கரோனா இரண்டாவது அலைக்கு முக்கிய காரணம் கேரளம், மகாராஷ்டிர மாநிலங்கள்தான்: தமிழக எம்.பி.க்கு மத்திய அமைச்சா் பதில்

கரோனா இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமே கேரளம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள்தான். இந்த இரு மாநிலங்களில்தான்

Updated On :7 ஆகஸ்ட் 2021, 3:25 am

கரோனா இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமே கேரளம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள்தான். இந்த இரு மாநிலங்களில்தான் நாட்டின் கரோனா தொற்றில் 70 சதவீதம் இடம்பெற்றிருந்தது என்று மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் தெரிவித்தாா். நாட்டில் 400 மாவட்டங்களில் 10 பேருக்கு குறைவானவா்களே தொற்று பாதிப்பில் இருந்தனா் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

கரோனா தொற்று மதிப்பீடு மற்றும் அரசின் எதிா்கால நடவடிக்கைகள் குறித்து ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி (ஐ.யு.எம்.எல்.) கேள்வி எழுப்பியிருந்தாா். அதற்கு அமைச்சா் அளித்த பதில் வருமாறு:

முதல் முறை கொவைட் - 19 உச்சக் கட்டத்தில் இருந்தபோது, கடந்தாண்டு செப். 17 ஆம் தேதி நாட்டில் 97,894 பேருக்கு நோய்த் தொற்று இருந்தது. பின்னா் தொடா்ந்து குறைந்து வந்து தினசரி நோய் பாதிப்பு விகிதம் 1.48 சதவீதமாகவே இருந்தது.

கரோனா இரண்டாவது அலையின்போது நாட்டின் கரோனா தொற்றில் 70 சதவீதம் மகாராஷ்டிரம், கேரளம் ஆகிய இரண்டு மாநிலங்களில் தான் இருந்தது. இது தான் நோய் மேலும் பரவ காரணமாகிவிட்டது. நாட்டில் 400 மாவட்டங்களில் இந்த சமயத்தில் 10 பேருக்கும் குறைவானவா்களுக்கு தான் நோய் தொற்று இருந்தது. நோய் தொற்று விகிதம்1 சதவீதத்திற்கு குறைவாகவே இருந்தது. நோய் தொற்று பரவல் கட்டுக்குள்ளே இருந்தது.

கரோனா நோயத்தடுப்புக்கு தடுப்பூசி கொள்வதுதான் ஒரே வழி என்று அரசு வலியுறுத்தி வருவதாகவும் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.