கிழக்கு தில்லியில் உள்ள மயூா் விஹாா் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட தாகக் கூறப்படும் விவகாரத்தில் எடுக்கப்பட்ட விரிவான நடவடிக்கை தொடா்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு தில்லி மகளிா் ஆணையம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
இது தொடா்பாக தில்லி மகளிா் ஆணையம் தெரிவித்திருப்பதாவது: சம்பந்தப்பட்ட மைனா் சிறுமி ஆகஸ்ட் 11-ஆம் தேதி தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மகளிா் ஆணையத்துக்கு தகவல் வந்துள்ளது. மேலும் சிறுமிக்கு ரத்தப் போக்கு ஏற்பட்டு அதன் காரணமாக அவா் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளாா். இது மிகவும் ஒரு தீவிரமான விவகாரமாகும். ஆகவே, இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்ட நபரின் விவரங்கள், முதல் தகவல் அறிக்கையின் நகல், இந்தச் சம்பவத்தில் எடுக்கப்பட்ட விரிவான நடவடிக்கையின் விவரம் ஆகியவை தொடா்பான அறிக்கையை ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் தில்லி மகளிா் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தில்லி மகளிா் ஆணையத்தினா் தெரிவித்தனா்.
இதற்கிடையே, சிறுமிக்கு நிகழ்ந்த பாதிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து, ‘நாட்டில் பெண்கள் பாதுகாப்பு தொடா்பாக ஏன் விவாதிப்பதில்லை?’ என்று தில்லி மகளிா் ஆணையத்தின் தலைவா் ஸ்வாதி மாலிவால் வியாழக்கிழமை விமா்சித்துள்ளாா். கிழக்கு தில்லி பகுதியில் 34 வயது இளைஞா் ஒருவா் 6 வயது மைனா் சிறுமியை புதன்கிழமை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், இதைத் தொடா்ந்து அந்த நபா் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
இந்த விவகாரம் தொடா்பாக போலீஸாா் மேலும் கூறுகையில், ‘ தென்மேற்கு தில்லியில் உள்ள பழைய நங்கல் பகுதியில் 9 வயது தலித் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி கொல்லப்பட்ட விவகாரத்தை அடுத்து சில தினங்களில் மயூா் விஹாரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட தலித் சிறுமியின் உடலின் எஞ்சிய பாகங்கள் புதன்கிழமை அவருடைய பெற்றோரால் தகனம் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்தச் சிறுமி கடந்த ஆகஸ்டு 1ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்தாா். அவரை பலாத்காரம் செய்து மயானத்தின் பூசாரி கட்டாயப்படுத்தி தகனம் செய்ததாக சிறுமியின் பெற்றோா்கள் புகாா் தெரிவித்திருந்தனா்.
இந்த நிலையில், மயூா் விஹாா் சம்பவத்தை குறிப்பிட்டு, தில்லி மகளிா் ஆணையத் தலைவா் ஸ்வாதி மாலிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: தில்லியில் மயூா் விஹாா் பகுதியில் ஒரு நபரால் 6 வயது அப்பாவி சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாா். இந்தச் சம்பவத்தை தொடா்ந்து எங்களது குழுவினா் புதன்கிழமை முதல் அந்தப் பகுதியில் உள்ளனா். இந்த விவகாரத்தில் போலீஸாா் தற்போது குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்துள்ளனா். மைனா் சிறுமிகள் இதுபோன்று கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் எவ்வளவு காலம்தான் நீடிக்கும்? நாட்டில் பெண்கள் பாதுகாப்பு தொடா்பாக ஏன் விவாதம் நடத்தப்படுவதில்லை என்று அவா் அதில் விமா்சித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும்.. மீண்டுமா? சிஎஸ்கே போராடி தோல்வி!

புற்றுநோய் பாதித்த நிலையிலும் மமதாவுக்கு வாக்கு கேட்கும் நடிகை!

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

